ஒரே சார்ஜில் 110 கி.மீ. போகலாம்... விலையும் ரொம்ப கம்மி... கலக்கும் கைனடிக் லூனா!

By SG BalanFirst Published Feb 8, 2024, 9:50 AM IST
Highlights

1.7 kWh மற்றும் பெரிய 3.0 kWh பேட்டரி கொண்ட மாடல்களையும் கைனடிக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த பைக் 2.2 கிலோவாட் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்க உதவுகிறது.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் கைனடிக் கிரீன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லூனா மொபெட்டின் எலக்ட்ரிக் மாடலை ரூ.70,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எலக்ட்ரிக் மொபெட்டுக்கான முன்பதிவு குடியரசு தினத்தன்று தொடங்கப்பட்டது. ரூ.500 டோக்கன் தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. 40,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த மொபெட்டை முன்பதிவு செய்துள்ளனர் என கைனடிக் கிரீன் (Kinetic Green) நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி கூறியுள்ளார்.

ஈ-லூனா மொபெட் டபுள் டியூபுலர் ஸ்டீல் சேசிஸ் கொண்டது. 150 கிலோ வரை பாரத்தைச் சுமக்கும் திறன் பெற்றுள்ளது. இந்த மொபெட்டை இயக்க 2.0 kWh லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.

எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய கைகோர்க்கும் ஒமேகா செய்கி, அட்டேரோ

1.7 kWh மற்றும் பெரிய 3.0 kWh பேட்டரி கொண்ட மாடல்களையும் கைனடிக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த பைக் 2.2 கிலோவாட் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்க உதவுகிறது.

இதில் முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சைடு ஸ்டாண்டு சென்சார், USB சார்ஜிங் போர்ட் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல வசதியான பேக் கொக்கிகள் ஆகியவை உள்ளன. பின்புற இருக்கையை தனியே பிரிக்கும் வசதியும் இருக்கிறது. சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை மற்றும் கருப்பு ஆகிய ஐந்து வண்ணங்களில் இந்த மாடலை கிடைக்கிறது.

இந்த மொபெட்டை கைனடிக் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். விரைவில் இந்த ஸ்கூட்டர் நாடு முழுவதும் அனைத்து கைனட்டிக் கிரீன் டீலர்களிடமும் கிடைக்கத் தொடங்கும். இதனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலமும் வாங்கலாம் என்றும் கைனட்டிங் கிரீன் கூறியுள்ளது.

பிப்ரவரிக்குப் பிறகு பேடிஎம் FASTag வேலை செய்யுமா? KYC பதிவுக்கு அவகாசம் இருக்கா?

click me!