புது கார் வாங்க ரெடியா? டாடாவின் சஃபாரி & ஹரியர் - 2.75 லட்சம் வரை தள்ளுபடி! இன்னும் பல ஆஃபர்ஸ்!

By Ansgar R  |  First Published Nov 15, 2024, 10:47 PM IST

Tata Cars in Offer : பிரபல டாடா நிறுவனம் தனது 2023ம் ஆண்டு மாடல் கார்களுக்கு கிட்டத்தட்ட 2.75 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகின்றது.


டாடாவின் சஃபாரி & ஹரியர்

கடந்த ஆண்டு அக்டோபரில் மாற்றியமைக்கப்பட்ட ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களை விற்பனை செய்யும் சில டீலர்கள் இன்னும் தங்களிடம் மீதமுள்ள 2023ம் ஆண்டு ஸ்டாக்களை பெரிய சலுகையில் விற்பனை செய்கின்றனர். இந்த மாடல்கள் மிகப்பெரிய (நேரடி) பணத் தள்ளுபடிகளுடன், எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்கிராபேஜ் போனஸுடன் மொத்தம் ரூ.2.75 லட்சம் வரை ஆஃபர்விலையில் கிடைக்கும். 2023 இல் தயாரிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மாடல்கள் ரூ. 1.75 லட்சம் வரை தள்ளுபடி பெறுகின்றன, அதே நேரத்தில் MY2024 ஹாரியர் மற்றும் சஃபாரியில் ரூ. 25,000 வரை ஆஃபர் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

கம்மி விலையில் SUV கார் வாங்க போறீங்களா? உங்களுக்கான மொத்த லிஸ்டும் இதோ

டாடாவின் இந்த முதன்மை SUVகள் இரண்டும் 170hp, 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இவை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. 5 இருக்கைகள் கொண்ட ஹாரியர் ரூ.14.99 லட்சம் முதல் ரூ.25.89 லட்சம் வரையிலும், 3-வரிசை சஃபாரி ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.79 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Tata Nexon தள்ளுபடி (நவம்பர் 2024 வரை மட்டுமே)

பிற பெரிய SUVகளைப் போலவே, சில டீலர்கள் இன்னும் நெக்ஸானின் Pre-Facelift ரக கார்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதற்கு ரொக்கத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்கிராபேஜ் போனஸ் உட்பட ரூ.1.35 லட்சம் வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. 2023 இல் உற்பத்தி செய்யப்படும் நெக்ஸான்கள் ரூ.80,000 வரை பலன்களைப் பெறுகின்றன. இருப்பினும், இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட நெஸோன் கார்களுக்கு ரூ. 30,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் டாடா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான் சிஎன்ஜியில் இதுவரை தள்ளுபடிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

Tata Tiago, Tigor தள்ளுபடி (நவம்பர் 2024 வரை மட்டுமே)

டாடாவின் மிகச்சிறிய மாடல்களான டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் அதன் காம்பாக்ட் செடான் இணையான டிகோரின் MY2023 பதிப்புகள், அவற்றின் பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு வகைகளிலும் இந்த மாதம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தள்ளுபடியைப் பெறுகின்றன. சுவாரஸ்யமாக, 2024 இல் தயாரிக்கப்பட்ட நுழைவு-நிலை Tigor XE ரூ. 45,000 மதிப்புள்ள பலன்களைப் பெறுகிறது. அதே நேரத்தில் மற்ற காம்பாக்ட் செடான் வரம்பில் வரும் கார்களுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். குறைந்த-ஸ்பெக் கொண்ட Tiago XE, XM மற்றும் XTO கார்கள் ரூ. 15,000 வரை பலன்களைக் கொண்டுள்ளன.

ரூ.2.30 லட்சத்தில் மிரட்ட வருகிறது TATA Nano EV கார்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ஓடுமாம்

click me!