பூலோக சொர்க்கம் Rolls Royce கார்! ரூ.5 Coin-ல Quality செக் செய்யலாம்? - பிஆர் சுந்தர்!

By Dinesh TG  |  First Published Aug 22, 2024, 9:18 AM IST

மற்ற கார்களை விட ரோல்ஸ்ராய்ஸ் கார் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதன் சிறப்பு அம்சம் என்னவென்று விளக்குகிறார் யூடியூபரும், பங்குச்சந்தை நிபுணருமான பிஆர் சுந்தர்.
 


கோடீஸ்வரர்களே வாங்க ஏங்கும் கார்களின் முதலானதாக Rolls Royce கார் உள்ளது. அந்த அளவிற்கு ஒவ்வொரு Rolls Royce காரும் தனி கவனத்துடன், வாங்குபவர்களின் குறிப்புகளை கருத்தில் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு Rolls Royce காரும் ஏறக்குறைய 6 மாத கால உருவாக்கத்திற்கு பின்பே வாங்குபவரின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது.

ஏனெனில், Rolls Royce கார்களின் ஒரு சில பாகங்களுக்கு, பெயிண்ட் அடிதல் போன்றவை கையாலேயே செய்யப்படுகிறது. இவ்வாறு பார்த்து, பார்த்து செதுக்கப்படுவாதாலேயே Rolls Royce கார்களின் விலைகள் பல கோடிகளில் நிர்ணயிக்கப்படுகின்றன. எவ்வளவு கோடிகள் இருப்பினும் Rolls royce கார்களை வாங்குவதற்கும் நம் நாட்டிலும் பிரபலங்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்பதுதான் ஆச்சிரியமான விஷயம்.

பிரபல யூடியூபரும், பங்கு சந்தை நிபுனருமான பிஆர் சுந்தர், துபாயில் தான் வாங்கியுள்ள Rolls Royce காரை 6 மாத காலத்திற்கு இந்தியா கொண்டுவந்துள்ளார். அந்த கார் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.



எவ்வளவு கார்கள் இருந்தாலும், Rolls Royce காரில் பல்வேறு சிறப்புகள் இருப்பகா கூறியுள்ளார் பிஆர் சுந்தர், காரின் முன்பகுதியில் உள்ள என்ஜினில் ஒரு 5 ரூபாய் நாணயத்தை நிறுத்திவைத்தால் அது விழாது என்றார். என்ஜின் ஓடும்போது ஒரு துளி அதிர்வு கூட வெளியே தெரியாது அதுவே அதன் சிறப்பு என்றார்.

Tap to resize

Latest Videos

undefined

Top 5 SUV Sunroof Cars: ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள டாப் 5 SUV கார்கள்!!

காருக்கும் விசா பாஸ்போர்ட் தேவை

ரோல்ஸ்ராய்ஸ் காரை இந்தியாவில் வாங்குவதற்கு அதற்கான இறக்குமதி வரியை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் காரை ஓட்ட வேண்டும் என்றால் அந்த காருக்கு பாஸ்போர்ட் மற்றும் ஆட்டோமொபைல் துறை வழங்கும் விசாவை பெற வேண்டும் என்றார். இவை இரண்டையும் முறைப்படி பெற்ற தன் துபாய் ரோல்ஸ்ராஸ் காரை இந்தியா கொண்டுவந்துள்ளதாகவும், 6 மாத காலத்திற்குப் பின்னர் மீண்டும் துபாய்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் பிஆர் சுந்தர்.

4 பேர் முதல் 5 பேர் வரை குடும்பமா போகணுமா.. அதிக மைலேஜ் தரும் உங்களுக்கான குறைந்த பட்ஜெட் கார்கள் இதோ!
 

click me!