Car Mileage | உங்கள் காரின் மைலேஜ் குறைவாக இருக்கா? அப்போ இது தான் காரணம்!

By Dinesh TG  |  First Published Aug 19, 2024, 4:49 PM IST

உங்கள் காரின் மைலேஜ் குறைந்துவிட்டால், குறைந்த அல்லது அதிக டயர் அழுத்தம், முறையற்ற இயந்திர பராமரிப்பு, அதிக சுமை மற்றும் தவறான எரிபொருள் பயன்பாடு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். 


பெரும்பாலானோர் நம்மில் பலரும் நீண்ட காலமாக நமது கார்களை முறையாக பராமரிப்பதில்லை. இதனால் பல பிரச்சனைகள் எழத் தொடங்குகின்றன.  நல்ல மைலேஜ் தரும் காரின் மைலேஜ் குறைந்து போவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். பராமரிப்பு இல்லாதது மட்டுமல்ல, காரின் மைலேஜ் குறைவதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. இருப்பினும், இந்த குறைகளை நீக்கி, உங்கள் காரை சரிசெய்யலாம். காரின் மைலேஜ் குறைவதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...

மோசமான ஓட்டுநர் திறன்

Latest Videos

undefined

நாம் கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது, காரை முறையான கியரில் இயக்க முடியாது. இது காரின் மைலேஜ்-ஐ பாதிக்கிறது.

திடீர் முடுக்கம் மற்றும் பிரேக்கிங், அதிக வேகத்தில் ஓட்டுதல் ஆகியவை எரிபொருள் நுகர்வை அதிகரிக்கும். வேகமாக வாகனம் ஓட்டும்போது இயந்திரத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் மைலேஜ் குறைகிறது. தேவையில்லாமல் இயந்திரத்தை இயக்கினாலும் உங்கள் காரின் மைலேஜ் குறையும்.

டயர் அழுத்தம் குறைவாக அல்லது அதிகமாக இருப்பது

கார் டயர்களில் காற்று அழுத்தம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அது இயந்திரத்தை பாதிக்கும். பின்னர் எரிபொருள் நுகர்வு அதிகரித்து மைலேஜ் குறையும். முறையான வழியில் அந்தந்த டயர்களுக்கேற்ற அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட வேண்டும். லாங் டிரிப் போகும் போது அல்லது சீரான இடைவெளியில் காரின் டயர் அழுத்தத்தை செக் செய்வது நல்லது. 

கார் என்ஜினை கவனிக்காமல் விடுதல்

கார் என்ஜினை சரியாக பராமரிக்கப்படாவிட்டால், அது மைலேஜை பாதிக்கும். இதற்கு, என்ஜின் ஆயிலை சரியான நேரத்தில் மாற்ற வேண்டு. மேலும் ஏர்ஃபில்டர்  மற்றும் ஸ்பார்க் பிளக்குகளை தவறாமல் சுத்தம் செய்யவும்.

அதிக சுமை

காரில் எடை அதிகரிப்பது இயந்திரத்தை பாதிக்கிறது, இதனால் எரிபொருள் நுகர்வும் அதிகரிக்கிறது. மேலும் இது மைலேஜ் குறைவதற்கு வழிவகுக்கிறது. காரில் கூடுதல் எடையை வைக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தவறான எரிபொருள் பயன்பாடு

நாம் பல வகையான எரிபொருளை நமது காரில் நிரப்புகிறோம், இது உங்கள் காரின் இயந்திரத்தை பாதிக்கலாம். எனவே உங்கள் காரில் தரமற்ற எரிபொருளை நிரப்புவதை தவிர்க்கவும்.

இந்த சிறிய ஆனால் முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டு காரை இயக்கினார் எரிபொருளை சேமித்து மைலேஜை அதிகரிக்கலாம். .

மேலும் படிக்க….

மின்சார வாகனங்கள் மானியம்: மத்திய அரசு நிறுத்திய பின்னும் தொடரும் மாநில அரசுகள்! நோட் பண்ணுங்க!!

பேமிலிக்கு ஏற்ற லோ பட்ஜெட் 7 சீட்டர் கார்கள் இவைதான்.. முழு லிஸ்ட் இதோ!

 

click me!