201 கி.மீ மைலேஜ்: Pure EV ePluto 7G MAX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!

By Manikanda Prabu  |  First Published Oct 20, 2023, 11:52 AM IST

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனமாக Pure EVஇன் ePluto 7G MAX சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலாம்


எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோமொபைல் சந்தையில் சாதித்து வருகிறது. அந்த வகையில், Pure EV நிறுவனமானது, தனது புதிய எலக்ட்ரிக் இரு சக்கர வாகனமான ePluto 7G Max மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் புதிய புரட்சியாக 201 கி.மீ. மைலேஜ் கொடுக்கும் இதன் விலை ரூ.ரூ.1,14,999 (எக்ஸ்-ஷோரூம்). மாநில அளவிலான மானியங்கள் மற்றும் ஆர்டிஓ கட்டணங்களைப் பொறுத்து ஆன்-ரோடு விலை மாறுபடும். ePluto 7G Max மின்சார ஸ்கூட்டரானது ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டவுன்ஹில் அசிஸ்ட், கோஸ்டிங் ரீஜென், ரிவர்ஸ் மோட் மற்றும் ஸ்மார்ட் AI போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது பேட்டரி ஆரோக்கியத்தை பராமரிக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

ePluto 7G Max மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்திலிருந்து டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட் பிளாக், சிவப்பு, கிரே, வெள்ளை என இந்த ஸ்கூட்டர் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

Tap to resize

Latest Videos

போட்றா வெடிய.. ரூ. 24,500 தள்ளுபடி.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த மாடலில் 3.5 KWH பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது AIS-156 சான்றிதழ் பெற்றது. மேலும், ஸ்மார்ட் BMS மற்றும் புளூடூத் இணைப்புடன் வருகிறது. பவர்டிரெய்ன் 2.4 kW உச்ச ஆற்றலைக் கொண்டுள்ளது. மூன்று டிரவிங் மோட்களை வழங்குகிறது. ePluto 7G Max மின்சார ஸ்கூட்டரில் ஏழு வெவ்வேறு மைக்ரோகண்ட்ரோலர்கள் மற்றும் எண்ணற்ற சென்சார்கள் உள்ளதாக Pure EV தெரிவித்துள்ளது. மேலும் over-the-air (OTA) firmware அப்டேட்டுகளை வழங்கி உங்கள் வாகனம் லேட்டஸ்ட் அப்டேட்டுடன் வரவுள்ளது.

click me!