ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கும் திட்டம் இப்போது நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடி செலவு செய்கிறது என்றும் பயோ எரிபொருள்களை பயன்படுத்தத் தொடங்கினால் எரிபொருள் இறக்குமதியை நிறுத்த முடியும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
undefined
பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் ரக வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். நாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் 36 கோடி வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற வேண்டும்.
இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அது கடினமானதுதான் என்றாலும் சாத்தியம் இல்லாதது இல்லை. இதுதான் எனது நோக்கம்.
விற்பனையில் பட்டைய கிளப்பும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! மார்ச் மாதம் டாப் கிளாஸ் சேல்ஸ்!
இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடி செலவு செய்கிறது. இந்தப் பணத்தை விவசாயிகள், கிராமங்களின் வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.
பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கும் திட்டம் இப்போது நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பயோ எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்த முடியும். இந்த மாற்றம் ஒரு நாள் கண்டிப்பாக வரும். இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி ஒருநாள் நிறுத்தப்படும். நமது நாடு தற்சார்பு கொண்ட நாடாக மாறும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எல்லாருமே எலக்ட்ரிக் கார் வாங்கலாம்! கம்மி விலையில் களமிறங்கும் மாருதி சுசுகி eVX!