2026ல் வரும் மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்… என்ன புதுசு?

Published : Dec 22, 2025, 12:19 PM IST
Maruti brezza

சுருக்கம்

மாருதி சுசுகி, தனது பிரெஸ்ஸா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026ல் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடலில் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களும், கேபினில் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் போன்ற முக்கிய மேம்பாடுகளும் இடம்பெறும்.

மாருதி சுசுகி தனது பிரபலமான சப்–4 மீட்டர் எஸ்யூவியான பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய மாடல் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஸ்பை படங்களில், புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி நிரப்பப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ஃபேஸ்லிஃப்ட் பதிப்பிலும் சிஎன்ஜி வேரியனுக்கு நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெளிவாகிறது.

வடிவமைப்பு மாற்றங்களைப் பொறுத்தவரை, புதிய பிரெஸ்ஸாவில் பெரிய அளவிலான வெளிப்புற மாற்றங்கள் இருக்காது. ஹெட்லெம்ப், டெயில்லெம்ப் வடிவமைப்புகள் தற்போதைய மாடலைப் போலவே தொடரலாம். இருப்பினும், எல்இடி டிஆர்எல்-களில் புதிய பேட்டர்ன், முன்பக்க கிரில் மற்றும் பம்பர்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம். பக்கவாட்டுத் தோற்றம் பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், புதிய அலாய் வீல்கள் மூலம் எஸ்யூவிக்கு புதுப்பித்த லுக் வழங்கப்படலாம்.

உள்ளக கேபினில் தான் அதிகமான மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஸ்டீயரிங் வீல், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் சீட்கள், பவர்டு டிரைவர் சீட், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படலாம். இதில் முக்கியமாக, 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுவது பெரிய அப்டேட்டாகப் பார்க்கப்படுகிறது.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தற்போதைய K15C ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 103.1 பிஎச்பி பவர், 139 என்எம் டார்க் வழங்குகிறது. பெட்ரோல் மாடலில் 17.8–19.89 கிமீ/லி மைலேஜும், சிஎன்ஜி வேரியனில் 25.51 கிமீ/கிகி மைலேஜும் கிடைக்கும். மேலும், அண்டர்பாடி சிஎன்ஜி கிட் வழங்கப்படுவதால், பூட் ஸ்பேஸ் பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பட்ஜெட்டில் கம்ஃபர்ட் கார் வேண்டுமா? குறைந்த விலையில் கிடைக்கும் டாடா டியாகோ - விலை, அம்சங்கள் இதோ
20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?