ஆட்டோ ரேஸ் போட்டி ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. ரேசுக்காக நியமிக்கப்பட்ட பாதையில் சீறிப்பாயும் மூன்று ஆடோடக்கள் இடையே கடுமையான போட்டி நடப்பதை வீடியோவில் காண முடிகிறது.
ஆட்டோ ரேஸ் போட்டி ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. ரேசுக்காக நியமிக்கப்பட்ட பாதையில் சீறிப்பாயும் மூன்று ஆடோடக்கள் இடையே கடுமையான போட்டி நடப்பதை வீடியோவில் காண முடிகிறது.
ரெட் இட் தளத்தில் "ஆட்டோ ஜிபி" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை அன்சூ வுமன் என்பவர் பகிர்ந்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்த முடியவில்லை.
undefined
கொடி அசைந்ததும் பந்தயம் தொடங்குகிறது. ஆட்டோக்களில் ஒன்று மின்னல் வேகத்தில் சென்று முன்னிலை பெற்று வெற்றியை நெருங்குகிறது. ஆனால், பந்தயத்தின் முடிவில் எந்த ஆட்டோ வென்றது என்று தெரியவில்லை. அதற்கு முன்பே வீடியோ முடிந்துவிடுகிறது.
ஹம்மிங் செய்தால் போதும்! யூடியூப் அந்தப் பாடலை கரெக்டா கண்டுபிடிக்கும்! ட்ரை பண்ணி பாருங்க!
Auto GP 🛺🛺
byu/anshuwuman inindiasocial
இந்த வீடியோ விரைவில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது. "2023 பார்முலா ஒன் சீசனை விட இது சுவாரஸ்யமாக இருக்கிறது" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "இந்த பந்தயத்தைப் பார்க்க விரும்புகிறேன். இது எங்கே நடக்கிறது?" என்று ஆவலுடன் கேட்கிறார். "ரொம்ப என்டர்டெயினிங்கா இருக்கு" என்று வெறொரு பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.
"தினமும் இப்படி போட்டி நடக்க வேண்டும். இங்கே சாலையில் இதேபோல ஆட்டோ ஸ்டண்ட் செய்தால் அது மிகவும் வேடிக்கையாக இருக்கும்" என்கிறார் இன்னொரு நெட்டிசன். "அங்கே ஆட்டோ ஓட்டுபவர்கள் விதிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்..." என்று பதிவிட்டுள்ளார் ஒரு பயனர்.
மகாதேவ் ஆப் உள்பட 22 ஆன்லைன் சூதாட்டச் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை