டுகாட்டி பைக் ஷோரூமில் ரூ.5 கோடியை அபேஸ் செய்து கம்பி நீட்டிய முன்னாள் ஊழியர்!

By SG Balan  |  First Published Nov 4, 2023, 10:40 PM IST

5 ஆண்டுகளாக பைக் ஷோரூமில் வேலை பார்த்த ராகேஷ் ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2023 வரை 21 பைக்குகளை விற்பனை செய்ததில் ரூ.5.2 கோடியை அபேஸ் செய்திருக்கிறார்.


பெங்களூருவில் விஎஸ்டி டுகாட்டி பைக் ஷோரூமின் ஆபரேஷன் ஹெட் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முன், வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.5.2 கோடி பணத்தைச் சுருட்டிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஷோரூமில் இருந்து பைக்குகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் வாகனங்களை ஆர்டிஓவிடம் பதிவு செய்ய முடியாமல் போனபோது மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதனை அடுத்து ஷோரூமின் பொது மேலாளர் சி.என்.மகேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Latest Videos

undefined

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஆந்திராவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள குகட்பல்லியைச் சேர்ந்த ராகேஷ் என்பவரைக் கைது செய்துள்ளனர். 38 வயதான அவர் பைக் ஷோரூமில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்தவர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வேலையில் இருந்து விலகியுள்ளார்.

ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2023 வரை சுமார் 21 பைக்குகளை விற்று ரூ.5.2 கோடியை ராகேஷ் அபேஸ் செய்திருக்கிறார். கடையின் கணக்குத் தணிக்கையின்போது, 9 டுகாட்டி பனிகேல், 3 மல்டிஸ்ட்ராடா, 4 டியாவெல், 2 மான்ஸ்டர், 1 டெசர்ட்க்ஸ், 1 ஸ்க்ராம்ப்ளர் மற்றும் 1 ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளை விற்பனை செய்ததில் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்துள்ளது.

21 வாடிக்கையாளர்களிடமும் இருந்து 5.2 கோடி ரூபாய் வசூலித்து பல வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார் ராகேஷ். வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியை நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு, மீதியை வேறு கணக்குகளுக்கு மாறியிருக்கிறார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 195 கிமீ வரை ஜாலியாக ரைடு போகலாம்.. விலை இவ்வளவு கம்மியா..

click me!