கார் விபத்தில் இருந்து காப்பாற்றும் கூகுள் பிக்சல் மொபைல்! கார் கிராஷ் டிடெக்‌ஷன் இந்தியாவுக்கு வந்தாச்சு!

By SG Balan  |  First Published Nov 5, 2023, 5:12 PM IST

கூகுள் பிக்சல் ஃபோன்களில் உள்ள Safety ஆப்ளிகேஷனில் இந்த கார் விபத்து கண்டறிதல் (Car Crash Detection) அம்சத்தைக் காணலாம். 


ஐபோன் பயனர்களுக்கு அதில் கார் விபத்தைக் கண்டறியும் அம்சம் இருப்பது தெரிந்திருக்கும். ஆனால் அந்த வசதியை முதலில் அறிமுகப்படுத்தியது கூகுள் தான். கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது.

2019ஆம் ஆண்டு கூகுள் பிக்சல் 3 மொபைலில் கார் விபத்து கண்டறிதல் அம்சம் சேர்க்கப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த ஒவ்வொரு பிக்சல் ஃபோனிலும் இந்த அம்சம் உள்ளது.  இருப்பினும், உலகின் சில பகுதிகளிலும், சில மொழிகளிலும் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். தற்போது இந்தியாவுக்கு இந்த விபத்து கண்டறியும் வசதி கிடைக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

கார் விபத்து கண்டறிதல் தொடர்பான உதவி பக்கத்தை கூகுள் நிறுவனம் புதுப்பித்துள்ளது. அதன்படி இந்த அம்சம் இப்போது புதிதாக மேலும் ஐந்து நாடுகளில் கிடைக்கிறது. இதன் மூலம் கார் விபத்து கண்டறியும் அம்சம் செயல்படும் நாடுகளின் மொத்த எண்ணிக்கை 20 ஆகக் கூடியிருக்கிறது. இந்தியா ஆஸ்திரியா, பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள நாடுகள் ஆகும். இந்தியாவில் இந்த வசதி கிடைத்தாலும் இந்திய மொழிகள் எதிலும் இந்த அம்சம் வேலை செய்யாது.

அயோத்தியில் ராமாயணத்தைப் பிரதிபலிக்கும் புதிய ரயில் நிலையம்! வெற லெவல் லுக்கில் AI போட்டோஸ்!

கூகுள் பிக்சல் ஃபோன்களில் உள்ள Safety ஆப்ளிகேஷனில் இந்த கார் விபத்து கண்டறிதல் (Car Crash Detection) அம்சத்தைக் காணலாம். பிக்சல் 4A மற்றும் அதற்குப் பிறகு வந்த மாடல்களில் தான் இந்த வசதி கிடைக்கும். மொபைலில் சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

நீங்கள் செல்லும் கார் எப்போதாவது கடுமையான விபத்தில் சிக்கினால், உங்கள் ஃபோன் தானாகவே 121 போன்ற அவசரகால சேவை எண்ணை அழைத்து உங்கள் இருப்பிடம் குறித்த தகவலைப் பகிர்ந்துவிடும். இந்தத் தொழில்நுட்பத்தில் காரின் இருப்பிடம், மோஷன் சென்சார்கள் மற்றும் அருகிலுள்ள ஒலிகளைப் பயன்படுத்தி கார் விபத்துகள் கண்டறியப்படுகின்றன.

இருப்பினும், இந்த அம்சம் மூலம் அனைத்து விதமான விபத்துகளையும் கண்டறிய முடியாது. மேலும் மொபைல் நெட்வொர்க் பலவீனமாக இருக்கும்போது இந்த வேலை சரியாக வேலை செய்யாமல் போகலாம். ஏற்கெனவே மொபைலில் வேறு ஒரு அழைப்பில் பேசிக்கொண்டிருந்தாலும் வேறு சில சூழ்நிலைகளிலும் அவசர உதவி எண்களை அழைக்க முடியாமல் போகலாம்.

டுகாட்டி பைக் ஷோரூமில் ரூ.5 கோடியை அபேஸ் செய்து கம்பி நீட்டிய முன்னாள் ஊழியர்!

click me!