காரில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு பட்டனை மட்டும் உபயோகப்படுத்த வேண்டாம் என மெக்கானிக்குகள் அறிவுறுத்துகின்றனர்
ஸ்காட்டி கில்மர் என்ற மெக்கானிக் 55 வருட தொழில் முறை அனுபவம் உடையவர். அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் கார் சேனல்களில் இதுவும் ஒன்று. இவர், காரில் நீண்ட தூர பயணங்களின் போது ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டிய பட்டன் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, காரின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் உள்ள மறுசுழற்சி பட்டனைத்தான் நீண்டதூர பயணங்களின் போது பயன்படுத்த வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பமான காலநிலையில் காரை விரைவாக குளிர்விக்க ஏர் கண்டிஷனிங் அமைப்பில் உள்ள மறுசுழற்சி செயல்பாடு பயனுள்ளதாக இருந்தாலும், நீண்ட பயணங்களின் போது இது ஆபத்தானது என்று கில்மர் விளக்குகிறார்.
காரணம், காற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், காரில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும் இதனால், ஆக்ஸிஜன் அளவு குறைவதால் அயர்வை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
செந்தில் பாலாஜி சிறையில் என்ன செய்கிறார்? சிறைத்துறை டிஐஜி தகவல்!
நீங்கள் நீண்ட நேரம் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டினால் புதிய காற்று உள்வருமாறு வைத்திருக்க வேண்டும் என கில்மர் அறிவுறுத்துகிறார். இருப்பினும், வெளியில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருந்தால், நீங்கள் மறுசுழற்சி செயல்பாட்டைப் பயன்படுத்தலாம், ஆனால் பின்புற ஜன்னல்களில் ஒன்றை சிறிது திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இதனால், போதுமான சுத்தமான காற்று காருக்குள் நுழைந்து உங்களை விழிப்புடன் வைத்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருக்கும்போது, அவை ஓட்டுநரின் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கலாம், எதிர்வினை நேரத்தை மெதுவாக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. இதனுடன் கில்மரின் அறிவுரைகளையும் இணைத்து பார்த்தால் நமக்கு எளிதாக புரியும்.