ஜெர்மன் அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் வாங்கப்படும் 552 பேருந்துகளின் ஒரு பகுதியாக இந்த அதிநவீனப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் அதிநவீன தாழ்தளப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயணம் செய்ய வசதியானவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
விரைவில் 352 தாழ்தள பேருந்துகளை பெருநகர போக்குவரத்துக் கழகம் வாங்க உள்ளது என்றும் இந்தப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜெர்மன் அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் வாங்கப்படும் 552 பேருந்துகளின் ஒரு பகுதியாக இந்த அதிநவீனப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் சுற்றுலா மாநாடு: புதுச்சேரி அரங்கைத் திறந்து வைத்தார் அமைச்சர் லட்சுமிநாராயணன்
சென்னை அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தவிர கோவை, மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான செயல்முறை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு வாரத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 442 தாழ்தளப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு ஏலம் நடைபெற்றது. பின் பேருந்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் உயர்ந்து 552 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் புதிதாக டெண்டர் விடுவதைத் தவிர்க்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதே நிதியுதவியைப் பெற்று 1,771 BS6 டீசலில் இயங்கும் சாதாரண பேருந்துகளை வாங்கவும் டெண்டர் விடப்பட்டது. இப்போது இந்தப் பேருந்துகள் எண்ணிக்கை 1,614 ஆக உள்ளது. விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தலா 303 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவைக்கு முறையே 251 மற்றும் 115 பேருந்துகளும், திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய சாதாரண பேருந்துகள் நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று போக்குவரத்துத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்து தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்குவது பற்றியும் தமிழ்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிகிறது.
அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி, குறைந்தது 50 பேர் காயம்