கியர், கிளட்ச் இல்லாமல் வசதியாக ஓட்டலாம்! சீனியர் சிட்டிசன்களுக்கு சொகுசான கார் எது?

By SG Balan  |  First Published Oct 25, 2023, 1:37 PM IST

மூத்த குடிமக்கள் ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் கூடிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.


மூத்த குடிமக்கள் தங்கள் தினசரி பயணத்திற்கு ஏற்ப எளிதாகவும் வசதியாகவும் உள்ள காரை வாங்க விரும்புகிறார்கள். இதனால் ஆட்டோமொபைல் துறையில் தானியங்கி கார்கள் பிரபலமாகி வருகின்றன. பெரிய சிக்கல் இல்லாமல் ஓட்டுவதற்கு தானியங்கி கார்கள் சிறந்த தேர்வாகும்.

சீனியர் சிட்டிசன்கள் விரும்பும் இந்த வகையான கார்கள் கியர், கிளட்ச் இல்லாமல் இயங்கக்கூடியவை.  மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரும் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 காரும் இந்த வகைக்குள் வரும் இரண்டு பிரபலமான கார்கள்.

Tap to resize

Latest Videos

ஓலா, ஏதர் எல்லாம் ஓரமா போங்க... கம்மி விலையில் வருகிறது கோகோரோ! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம சாய்ஸ்!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஒரு சிறிய ஹேட்ச்பேக் கார். இதில் ஆட்டோ டிரான்ஸ்மிஷமன் பொருத்தப்பட்டுள்ளதால் சிரமமின்றி கியர் மாற்றங்களை செய்யும் வசதியை வழங்குகிறது. இது முதியவர்கள் கார் ஓட்டுவதற்கு ஏற்றதாக அமைகிறது. காரில் விசாலமான கேபினும் இருப்பதால், வயதான பயணிகள் எளிதாக உள்ளே செல்லவும், வெளியே வரவும் வசதியாக இருக்கும். அதன் நம்பகமான செயல்திறறும் கொண்டது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10)

ஹூண்டாய் கிராண்ட் i10 காரில் உள்ள அம்சங்கள் மற்றும் ஓட்டுநர் பணியை வசதியானதாக மாற்றுகின்றன. இதுவும் மூத்த குடிமக்களுக்கு மற்றொரு ஏற்ற கார்களில் ஒன்று. ஒரு தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் தடையற்ற கியர் மாற்றங்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது. முதியவர்கள் ரிலாக்சாக காரை ஓட்டிச் செல்ல உதவுகிறது. இந்தக் கார் பரபரப்பான நகர வீதிகளில் செல்ல ஏற்றதாக அமைகிறது. அதன் ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் நம்பகமான செயல்திறன் வயதானவர்கள் எளிமையாக ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது.

புதிதாக கார் வாங்கத் திட்டம் வைத்துள்ள மூத்த குடிமக்கள் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டு கார்களும் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் கூடிய சிறந்த கார்கள். ஸ்விஃப்ட் காரின் விலை சிறந்த மைலேஜ் தருவதுடன் சற்றே குறைந்த விலையில் கிடைக்கிறது.

சஃபாரி காரின் புதிய மாடலை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்... அட்டகாசமான தோற்றத்தில் புதிய வசதிகள்!

click me!