டிவிஎஸ் ரைடர் பைக்கின் விற்பனை வளர்ச்சி பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது
TVS Raider 125 என்பது 125cc செக்மெண்டில் சென்னையை தளமாகக் கொண்ட டிவிஎஸ் நிறுவனத்தின் இரண்டாவது வெற்றியாகும். NTorqஐப் போலவே, Raider 125 ஆனது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான உந்துதலாக மாறி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி விற்பனைக்கு வந்த ரைடர் 125, நடப்பாண்டு செப்டம்பர் இறுதி வரை, அதாவது சுமார் 25 மாதங்களில் உள்நாட்டு சந்தையில் 5,00,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
SIAM ஆல் வெளியிடப்பட்ட தகவல்களில் இருந்து, சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, TVS ரைடர் 2023 செப்டம்பர் இறுதி வரை 544,398 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஜென்-இசட் மோட்டார்சைக்கிள் வாங்குபவர்களிடமிருந்து டிவிஎஸ் ரைடருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 21,766 டிவிஎஸ் ரைடர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 48,753 ஆக உயர்ந்துள்ளது. இது 124 சதவீத வளர்ச்சியாகும். பிரபலமான அப்பாச்சி சீரீஸை விட ரைடர் விரைவில் TVSக்கு அதிகம் விற்பனையாகும் பைக்காக மாறியுள்ளது.
undefined
திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்: ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
சிங்கிள் சீட், ஸ்பிளிட் சீட் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கும் ரைடர் 125இன் ஆன்-ரோடு விலை ரூ.ரூ.93,700 - ரூ.100,800 வரை உள்ளது. இந்த பைக்கில், 11.38 பிஎஸ் பவர் மற்றும் 11.2 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நல்ல மைலேஜை வழங்கக் கூடியது. டிவிஎஸ் ரைடர் பைக், ஒரு லிட்டருக்கு 67 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைலேஜை தவிர்த்து அதனுடைய டிசைனும் அதற்கு பக்கபலமாக உள்ளது. ஹெட்லைட், டெயில் லேம்ப், ஸ்பிலிட் சீட் போன்ற அம்சங்கள் டிவிஎஸ் ரைடர் 125க்கு ஸ்போர்ட்ஸ் லுக்கை கொடுப்பது இதன் தனித்துவ அம்சமாகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடும் திறன் இந்த பைக்கிற்கு உண்டு. டிஎஃப்டி டிஸ்ப்ளே உடன் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட், வாய்ஸ் அஸிஸ்ட் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.