Maruti Suzuki Fronx SUV கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகமானதில் இருந்து ஒரு லட்சம் யூனிட் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வரும் ஒரே மாருதி சுஸுகி மாடல் இது மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx SUV) கார் கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகமானதில் இருந்து ஒரு லட்சம் யூனிட் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலேனோவை அடிப்படையாகக் கொண்ட இந்த SUV, முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023 காட்சிப்படுத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு சந்தைக்கு வந்தது.
ஒன்பது மாதங்களில், இந்தக் கார் கிராண்ட் விட்டாராவை விஞ்சி, இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் காராக மாறியுள்ளது. SUV பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனையை இரட்டிப்பாக்குவதில் Fronx காரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. SUV பிரிவில் மாருதி கார்களின் விற்பனை 2022 இல் 10.4% வளர்ச்சி கண்ட நிலையில், 2023 இல் 19.7% வளர்ச்சியை எட்டியுள்ளது.
undefined
Fronx ஆரம்பத்தில் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் எஞ்சின் என இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் வழங்கப்பட்டது. டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வரும் ஒரே மாருதி சுஸுகி மாடல் Fronx மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் கனவு காரை வாங்க இதுதான் சரியான நேரம்! அதிரடி மாற்றத்துக்கு ரெடியாகும் டாடா மோட்டார்ஸ்!
ஜூலை 2023 இல், இதே காரின் 1.2 லிட்டர் மோட்டார் வேரியண்ட்டை இயற்கை எரிவாயுவில் இயங்கும் வசதியுடன் மாருதி சுசுகி அறிமுகப்படுத்தியது. இந்தக் கார் 77.5 hp மற்றும் 98.5 Nm டார்க்கை வழங்குகிறது.
இதுவரை விற்கப்பட்ட 1 லட்சம் Fronx கார்கள் பற்றிப் பார்க்கும்போது, இயற்கை எரிவாயுவில் இயங்கும் மாடல் 20 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 20,000 யூனிட்டுகளுக்கு மேல் அந்த மாடல் விற்கப்பட்டுள்ளது. 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 5-7 சதவீதமும், 1.2-லிட்டர் காரை சுமார் 25 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
மாருதியின் ப்ரீமியம் காரான Maruti Suzuki Fronx ரூ.7.47 லட்சம் ஆரம்ப விலையைக் கொண்டிருக்கிறது. அதிகபட்ச விலை ரூ.12.06 லட்சம் வரை செல்கிறது. இயற்கை எரிவாயு மாடல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.42 லட்சமாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள்தான். ஆன் ரோடு விலை இன்னும் அதிகமாக இருக்கும்.
ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடும் புதிய ஹீரோ மாவ்ரிக் 440 அறிமுகம்! விரைவில் புக்கிங் ஆரம்பம்!