மாருதி சுசுகி ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ, செலிரியோ டிரூம் எடிஷன் விரைவில் அறிமுகம்!

By SG Balan  |  First Published Jun 2, 2024, 8:44 AM IST

மூன்று மாடல்களும் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் என்றும் இந்த ட்ரீம் எடிஷன் கார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என்றும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மாடல்களின் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.


மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ கார்களின் ட்ரீம் எடிஷன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த மூன்று மாடல்களும் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் என்றும் இந்த ட்ரீம் எடிஷன் கார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும் என்றும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மாடல்களின் முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.

Latest Videos

undefined

ஆனால் மூன்று கார்களிலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பல நவீன வசதிகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வார இறுதிக்குள் அனைத்து விவரங்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள டீலரைச் சந்தித்து புக் செய்யலாம் என மாருதி சுஸுகி கூறியிருக்கிறது.

Alto K10, Celerio மற்றும் S-Presso ட்ரீம் எடிஷன் 1.0-லிட்டர், 3-சிலிண்டர், NA பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்கும். 66 bhp ஆற்றல் மற்றும் 89 nm முறுக்குவிசையுடன், 5-ஸ்பீடு மேனுவல் கொண்ட கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இந்த புதிய ட்ரீம் எடிஷனலில் இருந்து தனது ஆட்டோ கியர் ஷிப்ட் (ஏஜிஎஸ்) விலையை ரூ.5000 குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

“பல இடங்களில் RTO பதிவுக் கட்டணம் ரூ.5 லட்சத்தில் இருந்து மாறுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் நலனை கவனித்தில் கொண்டு, மலிவான விலையை நிர்ணயித்துள்ளோம்" என நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறியிருக்கிறார்.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் தயாரிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்விஃப்ட் சிஎன்ஜி பெட்ரோல் ஸ்விஃப்ட்டைப் போலவே தோற்றமளிக்கும் எனவும் அதே 1.2-லிட்டர், 3-சிலிண்டர், என்ஏ பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!