
கல்கி 2898 AD திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆனால், இப்போது அந்தப் படம் குறித்து கவனத்தை ஈர்த்திருப்பது இவர்களில் படத்தில் வரும் ஹைடெக் ரோபோகார் புஜ்ஜி தான். அதன் பிரமிக்க வைக்கும் டிசைன் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்திய சினிமாவில் முதன்முறையாக, கல்கி 2898 AD படத்தில் இந்த சூப்பர் கார் புஜ்ஜி இடம்பெறும். இந்தக் காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். படம் வெளிவர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது புஜ்ஜியை வைத்து பட புரொமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
ஆன்லைனில் நெட்டிசன்களைக் கவர்ந்த புஜ்ஜி, இந்த முறை சென்னையில் உள்ள சாலைகளில் வலம் வந்து பலரையும் வியக்க வைத்துள்ளது. கல்கி 2898 AD படத்தின் தயாரிப்பாளர்கள் புஜ்ஜியை வைத்து நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரொமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் நடிகர் பிரபாஸ் தானே வாகனத்தை ஓட்டினார். அதைத் தொடர்ந்து புஜ்ஜி இப்போது சென்னைக்கு வந்துள்ளது. சென்னையின் பரபரப்பான சாலைகளில் புஜ்ஜி வலம் வரும் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ரேசிங் ஆர்வலரும் டோலிவுட் நடிகருமான நாக சைதன்யா, இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் கார் பந்தைய வீரரான நரேன் போன்ற பல பிரபலங்கள் புஜ்ஜி காரை ஓட்டியுள்ளனர்.
இந்த புஜ்ஜி கார் சாதாரண வாகனம் அல்ல. கல்கி படத்தில் பிரபாஸின் நெருங்கிய நண்பரின் பாத்திரத்தில் இந்த புஜ்ஜி இடம்பெறுகிறது. ப்ரோமோவில் பிரபாஸும் புஜ்ஜியும் வரும் காட்சிகளும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளன.
கல்கி பட பிரமோஷனுக்கு மட்டுமின்றி ஒரு வெப் சீரிஸிலும் புஜ்ஜி வருகிறது. கல்கி பட தயாரிப்பாளர்கள் 'புஜ்ஜி மற்றும் பைரவா' என்ற தலைப்பில் ஒரு சிறப்பு முன்னோட்டத்தை மே 31ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட உள்ளனர்.