ரூ.60 லட்சம் சேமிக்கலாம்! ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி, ஸ்போர்ட் கார்களுக்கு தடாலடி தள்ளுபடி!

By SG Balan  |  First Published May 28, 2024, 10:01 AM IST

உள்ளூரிலேயே தயாரிப்பதன் காரணமாக, இரண்டு எஸ்.யூ.வி. கார்களுக்கும் இறக்குமதி வரி கணிசமாகக் குறைகிறது.  இதன் விளைவாக 18-22 சதவிகிதம் செலவு சேமிக்கப்படுகிறது.


டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) ரேஞ்ச் ரோவர் சொகுசு எஸ்யூவி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

ஜே.எல்.ஆர். கார் தயாரிப்புக்குத் தேவையான கருவிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றை புனேவில் உள்ள ஆலையில் வைத்து கார்களை உற்பத்தி செய்கிறது. பிரிட்டனுக்கு வெளியே இன்னொரு நாட்டில் ஜே.எல்.ஆர். எஸ்.யூ.வி. கார்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.

Latest Videos

undefined

இந்த நடவடிக்கையின் விளைவாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எஸ்யூவிகளின் விற்பனை மற்றும் விநியோகம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. உள்ளூரிலேயே தயாரிப்பதன் காரணமாக, இரண்டு எஸ்.யூ.வி. கார்களுக்கும் இறக்குமதி வரி கணிசமாகக் குறைகிறது.  இதன் விளைவாக 18-22 சதவிகிதம் செலவு சேமிக்கப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி மாடல் இப்போது ரூ.60 லட்சம் வரை விலை குறைந்துள்ளது. அதேசமயம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரூ.40 லட்சம் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் 3.0-லிட்டர் HSE LWB டீசல் வேரியண்ட் விலை ரூ.2.36 கோடி (எக்ஸ்-ஷோரூம்), இதன் பெட்ரோல் வேரியண்ட் ரூ.2.6 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு உள்ளது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் விலை ரூ.1.40 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகிறது.

ஜே.எல்.ஆர். இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா, “இந்தியாவில் உள்ள நம் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம். ரேஞ்ச் ரோவரை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் முதல் நாடு என்ற பெருமையை நாங்கள் பெற்றுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஃபிளாக்ஷிப் ரேஞ்ச் ரோவரில் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன. 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர், டர்போ பெட்ரோல் எஞ்சின் 400hp பவர் மற்றும் 550Nm டார்க்கை வெளிப்படுத்தும். 3.0-லிட்டர், ஆறு-சிலிண்டர் டீசல் எஞ்சின் 350hp பவர் மற்றும் 700Nm டார்க்கை வெளிப்படுத்தும். 4.4-லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, V8 கொண்ட மற்றொரு எஞ்சின் 530hp பவர் மற்றும் 750Nm டார்க்கை வெளிப்படுத்தும். அனைத்து என்ஜின்களும் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

13.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13.7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 1,600W மெரிடியன் சிக்னேச்சர்-சவுண்ட்லேஷன் சிஸ்டம், ஆக்டிவ் நோயிஸ் சௌண்ட்லேஷன் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன. பின்புற இருக்கைகளை சரிசெய்ய டச் ஸ்கீரீன் வசதி உள்ளது. டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட்கள், 3டி சரவுண்ட் கேமரா என இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டது. 3.0-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் ஸ்ட்ரெய்ட்-சிக்ஸ் எஞ்சின் 350hp பவர் மற்றும் 700Nm டார்க் கொண்டது. 3.0-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் ஸ்ட்ரெய்ட்-சிக்ஸ் டர்போ பெட்ரோல் எஞ்சின் 400hp பவர் மற்றும் 550Nm டார்க் கொண்டது. இரண்டு என்ஜின்களும் 8-ஸ்பீடு டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதில், 13.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13.7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 19 ஸ்பீக்கர்கள் மெரிடியன் சிஸ்டம், நான்கு விதமான கிளைமேட் கன்ட்ரோல், 360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.

click me!