ஆட்டோ சவாரிக்கு ரூ.7,66 கோடி பில்! ரூ.75 டிஸ்கவுண்ட்! உபர் நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

By SG BalanFirst Published Apr 2, 2024, 8:47 PM IST
Highlights

வீடியோவில் பில்லில் வந்த தொகையைக் காட்டும்படி ஆஷிஷ் கூறுகிறார். அப்போது தீபக்கின் மொபைலில் ரூ.7,66,83,762 என்று பில் தொகை வந்திருப்பதைக் காண முடிகிறது. "நீங்கள் சந்திரயான் பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்தால் கூட இவ்வளவு செலவாகி இருக்காது" என இருவரும் நகைச்சுவையாகப் பேசிக்கொள்கின்றனர்.

நொய்டாவில் உபர் வாடிக்கையாளர் வழக்கமான ஆட்டோ சவாரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பில் வந்ததைப்ப பார்த்து அதிர்ச்சியடைந்தார். தீபக் தெங்குரியா என்ற ஆட்டோ சவாரிக்கு புக் செய்துள்ளார். அதன் கட்டணம் ரூ.62 மட்டுமே. ஆனால், செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், டெங்குரியாவுக்கு அவரது மொபைலில் ரூ.7.66 கோடிக்கு பில் வந்துள்ளது.

தீபக்கின் நண்பர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தீபக்கும் அவரது நண்பர் ஆஷிஷும் உபர் அப்ளிகேஷனில் எக்கச்செக்கமான தொகை பில்லாக வந்தது குறித்து விவாதிக்கின்றனர்.

வீடியோவில் பில்லில் வந்த தொகையைக் காட்டும்படி ஆஷிஷ் கூறுகிறார். அப்போது தீபக்கின் மொபைலில் ரூ.7,66,83,762 என்று பில் தொகை வந்திருப்பதைக் காண முடிகிறது. "நீங்கள் சந்திரயான் பயணத்திற்கு முன்பதிவு செய்திருந்தால் கூட இவ்வளவு செலவாகி இருக்காது" என இருவரும் நகைச்சுவையாகப் பேசிக்கொள்கின்றனர்.

திமுகவின் காலை உணவுத் திட்டம் உலகத்துக்கே முன்னோடி! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

सुबह-सुबह ने को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t

— Ashish Mishra (@ktakshish)

வெயிட்டிங் சார்ஜாக ரூ.5,99,09189 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் ரூ.75 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கின்றனர். வீடியோவில் தோன்றாத ஒருவர், இதில் ஜிஎஸ்டி எவ்வளவு என்று கேட்கிறார். அதற்கு தீபக், அப்படியே ஏதும் இல்லை என்கிறார்.

இந்த வீடியோ பதிவுக்குப் பதிலளித்த உபர், “இந்தச் பிரச்சினை ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். இது தொடர்பாக விசாரித்துவிட்டு உங்களைத் தொடர்புகொள்வோம்" எனக் கூறியுள்ளது. இதனிடையே, நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி உபர் நிறுவனத்தை கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவில் ரிப்ளை செய்துள்ள ஒரு ட்விட்டர் பயனர், "நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தே ஆட்டோவில் வருகிறீர்களா?" என்று வேடிக்கையாகக் கேட்டிருக்கிறார்.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! மார்ச் மாதம் டாப் கிளாஸ் சேல்ஸ்!

 
click me!