இந்தியாவில் விலை உயர்ந்த 400சிசி பைக் இதுதான்! லிமிட்டட் ஸ்டாக் தான் இருக்கு... மிஸ் பண்ணாதீங்க பாஸ்!

By SG Balan  |  First Published Jun 2, 2024, 9:19 AM IST

Kawasaki Ninja ZX-4RR தான் இந்தியாவின் விலையுயர்ந்த 400cc பைக் ஆகும். இந்த பைக் இந்தியாவில் CBU முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை Z900 பைக்கை விட ரூ.28,000 குறைவாகவே இருக்கிறது.


கவாஸாகி இந்தியா நிறுவனம் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-4ஆர்ஆர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலை ரூ. 9.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kawasaki Ninja ZX-4RR தான் இந்தியாவின் விலையுயர்ந்த 400cc பைக் ஆகும். இந்த பைக் இந்தியாவில் CBU முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை Z900 பைக்கை விட ரூ.28,000 குறைவாகவே இருக்கிறது.

Latest Videos

undefined

ZX-4R உடன் ஒப்பிடும்போது, ​​4RR மாடல் கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய வண்ணத்தில் கிடைக்கிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்த பைக் ZX-4R போலவே தோற்றம் அளிக்கிறது. ஆனால் இது ZX4R இன் மெட்டாலிக் கருப்பு நிறத்துடன் KRT மாடலின் பெயிண்ட் திட்டத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ, செலிரியோ டிரூம் எடிஷன் விரைவில் அறிமுகம்!

பைக்கின் மெயின்பிரேமும் ஒன்றாகவே உள்ளது. ஆனால் சஸ்பென்ஷன் அமைப்பு வேறு. இது ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் ஃபோர்க்குகள் மற்றும் முழுமையாக சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ-ஷாக் அமைப்பைப் பெறுகிறது.

ZX-4R அட்ஜஸ்ட் செய்ய முடியாத முன் ஃபோர்க்குகள் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோ-ஷாக் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பிலும் வித்தியாசம் இல்லை. 290 மிமீ செமி ஃப்ளோட்டிங் முன் டிஸ்க்குகள் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க்குகள் உள்ளன. கொண்டுள்ளது. பை-டைரக்‌ஷனல் ஷிஃப்டரையும் ஆப்ஷனாகக் கொடுத்துள்ளது.

4RR பைக்கில் 4.3-இன்ச் TFT டிஸ்ப்ளே இருக்கிறது. நார்மல் மற்றும் சர்க்யூட் புளூடூத் இணைப்பு, ரைடாலஜி அப்ளிகேஷன், LED விளக்குகள், நான்கு விதமான ரைடிங் முறைகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் என பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கின்றன.

கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-4ஆர்ஆர் அதே லிக்விட்-கூல்டு, 399சிசி, இன்லைன்-ஃபோர் எஞ்சின் மூலம் இயங்கும். இது 14,500rpm இல் 77hp ஆற்றலையும், 13,000rpm இல் 39Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும். இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் விரைவான பை-டைரக்‌ஷனல் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.60 லட்சம் சேமிக்கலாம்! ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி, ஸ்போர்ட் கார்களுக்கு தடாலடி தள்ளுபடி!

click me!