சொளையா ரூ.10,000 தள்ளுபடி! தாராளமான ஆஃபரில் கிடைக்கும் ஐவூமி ஈ-ஸ்கூட்டர்கள்!

Published : Feb 21, 2024, 08:15 AM ISTUpdated : Feb 21, 2024, 08:28 AM IST
சொளையா ரூ.10,000 தள்ளுபடி! தாராளமான ஆஃபரில் கிடைக்கும் ஐவூமி ஈ-ஸ்கூட்டர்கள்!

சுருக்கம்

வாடிக்கையாளர்கள் ஐவூமியின் JeetX  எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.10,000 தள்ளுபடி விலையில் பெறலாம். மேலும் S1 மற்றும் S1 2.0 மாடல்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி உள்ளது.

புனேவை தளமாகக் கொண்ட EV ஸ்டார்ட்அப் ஐவூமி (iVOOMi) அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 10,000 ரூபாய் வரை தள்ளுபடியை வழங்குகிறது. இந்த குறுகிய கால தள்ளுபடி மார்ச் 31 வரை மட்டுமே கிடைக்கும்.

இந்தச் சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் ஐவூமியின் JeetX  எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.10,000 தள்ளுபடி விலையில் பெறலாம். மேலும் S1 மற்றும் S1 2.0 மாடல்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி உள்ளது.

JeetX மாடலின் விலை இப்போது ரூ.89,999. இது 2 kW லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்டது. 2.5 kW மோட்டாருடன் மணிக்கு 65 கி.மீ. உச்சபட்ச வேகத்தில் பயணிக்கக் கூடியது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 110 கிமீ வரை பயணிக்கலாம்.

லட்ச ரூபாய்க்கு 10 காயினாகக் கொடுத்து ஏதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய இளைஞர்!

iVOOMi S1 இப்போது ரூ. 5,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.79,999 விலையில் கிடைக்கிறது. இந்த மாடல் 2.1 kW பேட்டரி மூலம் கொண்டது. 110 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கிறது.

அதேசமயம், S1 2.0 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.82,999 விலைக்குக் கிடைக்கும். இந்த ஈ-ஸ்கூட்டரை வெறும் 10 ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தைக் கொண்டு சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என்று ஐவூமி கூறுகிறது.

இந்தச் சலுகைகளுடன் கூடுதலாக, அனைத்து iVOOMi எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஸ்மார்ட் கிளவுட்-இணைக்கப்பட்ட இ-ஸ்கூட்டர்களாக மேம்படுத்தும் வாய்ப்பையும் கொடுக்கிறது. புளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் போன்கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் போன்ற அம்சங்களை வழங்கும் அப்கிரேட் ஆப்ஷன் ரூ.3,000 க்குக் கிடைக்கும்.

டெல்லியில் 80% பேர் போதையில் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல்! கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!

PREV
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!