Kawasaki Z650RS Launch : கவாசகி இந்தியா, இந்திய சந்தையில் தனது வண்டிகளின் அளவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் வாகன பட்டியலில் இந்த 2024ம் ஆண்டு Z650RS என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கவாசகி Z650RS கடந்த 2023ம் ஆண்டு உலக சந்தையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டு Z650RS சில கூடுதல் சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது என்றே கூறலாம். இதற்கு முந்தைய மடலை விட இது இழுவைக் கட்டுப்பாட்டு அம்சத்தைப் கூடுதலாக பெறுகிறது. இந்த அம்ச மேம்படுத்தல் தவிர, மோட்டார் சைக்கிள் வடிவமைப்பு, இயக்கவியல், பரிமாணங்கள் உட்பட முந்தைய தலைமுறைகளிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து பண்புகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மிட்சுபிஷி! டிவிஸ் நிறுவனத்துடன் கூட்டணி!
இந்த புதிய 2024 Z650RS ஆனது 649cc பேரலல்-ட்வின் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 67hp மற்றும் 64 Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. மோட்டார் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முந்தைய வடிவத்தை காட்டிலும் சற்று கூடுதல் திறன் கொண்ட என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இப்பொது அறிமுகமாகியுள்ள இந்த பைக் சுமார் 6.99 லட்சம் என்ற விலைக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதன் முந்தைய மடலை விட சுமார் 7000 ரூபாய் கூடுதல் விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கவாசகி நிறுவனம் தனது 2 புதிய பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் 80% பேர் போதையில் வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல்! கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித் தகவல்!