இந்திய EV ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 25 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் சுவிஸ் நிறுவனம்

By SG BalanFirst Published Jan 29, 2024, 4:23 PM IST
Highlights

குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு கொண்ட துறைகளில் முதலீடு செய்துவரும் ரெஸ்பான்ஸ் எபிலிட்டி (responsAbility) ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரெஸ்பான்ஸ் எபிலிட்டி நிறுவனம் இந்தியா மின்சார வாகன ஸ்டாடர்ட்அப் நிறுவனமான ப்ளூ ஸ்மார்ட்டில் 25 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் வாடகைக்கு மின்சார கார்களை இயக்கிவரும் ப்ளூ ஸ்மார்ட் (BluSmart) நிறுவனம் BluSmart இந்தியாவின் முதல் முதலில் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார் சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தனது சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு கொண்ட துறைகளில் முதலீடு செய்துவரும் ரெஸ்பான்ஸ் எபிலிட்டி (responsAbility) ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

"ResponsAbility நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஆதரவு, எங்கள் 100 சதவீத எலெக்ட்ரிக் கார் சேவையை விரைவாக விரிவுபடுத்துவதற்கும், சிறந்த, தூய்மையான மற்றும் நிலையான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் உதவியாக இருக்கும்" என்று புளூஸ்மார்ட் இணை நிறுவனம் அன்மோல் சிங் ஜக்கி தெரிவித்துள்ளார்.

ப்ளூ ஸ்மார்ட் (BluSmart) நிறுவனத்தின் தகவல்படி, இந்நிறுவனம் தற்போது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய EV கார் சேவை நிறுவனமாக உள்ளது. தற்போது 6,000 எலெக்ட்ரிக் கார்களை இயக்கி வருகிறது. 110 கோடிக்கும் அதிகமான சவாரிகளை நிறைவு செய்துள்ளது. இதுவரை 360 மில்லியன் கி.மீ. பயணத்தில் மின்சார கார்களை மட்டுமே இயக்கிதால், 26,000 மெட்ரிக் டன் CO2 கலப்பைத் தவிர்த்துள்ளது.

"குறைந்த CO2 உமிழ்வுக்கான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஆசியாவில் CO2 உமிழ்வைத் தீவிரமாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வளர்ச்சி நிறுவனங்களை ஆதரிப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்" ResponsAbility நிறுவனத்தின் சமீர் திர்கர் கூறுகிறார்.

BluSmart நிறுவனம் தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் 1.4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 35 மின்சார கார் சார்ஜிங் மையங்களில் 4,000 EV சார்ஜர்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 50 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. மேலும் இது முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிட்டுள்ளது.

click me!