ஹீரோ நிறுவனம் மூன்று சக்கரங்கள் கொண்ட ட்ரைக் (Trike) வகை ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரைக் வகை ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் இதன் சிறப்பான ஸ்டெபிளிட்டி காரணமாகவே இதனை விரும்புகிறார்கள்.
ஹீரோ வேர்ல்ட் 2024 நிகழ்ச்சியில் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மூன்று சக்கரங்கள் கொண்ட ட்ரைக் (Trike) வகை ஸ்கூட்டர் ஒன்றின் கான்செப்ட் மாடலை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இப்போது இந்தியச் சந்தையில் விற்பனைக்கு உள்ளது. விடா வி1 (Vida V1) என்ற அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைப் போல சில மாற்றங்களைச் செய்து புதிய மூன்று சக்கர ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. முன்பக்கத்தில் ஒரு சக்கரத்துக்குப் பதிலாக இரண்டு சக்கரங்கள் இருக்கின்றன. அதற்கு ஏற்ப முன்பக்க சக்கரங்களுக்கான சஸ்பென்ஷனும் மாறி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் இப்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
எலெக்ட்ரிக் கார் வாங்கணுமா? ஈசியாக வங்கிக்கடன் பெறுவது வாங்கலாம்! முழு விவரம் இதோ!
ஹீரோ விடா ஸ்வே (Hero Vida Sway) என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வரும் என்று தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சில நாடுகளில் இதுபோன் ட்ரைக் வகை ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு இருக்கிறது. பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை இந்த ட்ரைக் வகை ஸ்கூட்டர்கள் கொடுக்கும் எனக் வல்லுநர்கள் கூறுகின்றனர். மூன்று சக்கரங்களால் வண்டியை பேலன்ஸ் செய்து சரியாமல் ஓட்ட முடியும். இதனால், சாலையில் செல்லும்போது பெரிய அசம்பாவிதம் ஏதும் நேராமல் தடுக்க வாய்ப்பு அதிகம் என்றும் சொல்கிறார்கள்.
ட்ரைக் வகை ஸ்கூட்டர்களை வாங்குபவர்கள் இதன் சிறப்பான ஸ்டெபிளிட்டி காரணமாகவே இதனை விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், ஹீரோ நிறுவனம் தனது புதிய ட்ரைக் வகை ஸ்கூட்டரில் உள்ள பிற அம்சங்கள் என்னென்ன என்று தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த மாறுபட்ட ஸ்கூட்டருக்கு மோட்டார் சைக்கிள் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜாவா முதல் ராயல் என்ஃபீல்டு வரை... இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் டாப் 5 பைக்குகள்!