HSRP என்பது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ணக் குறியிடப்பட்ட லேபிள் கொண்ட நம்பர் பிளேட் ஆகும். இந்த பிளேட் இல்லாத வாகனங்களை ஓட்டி பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் வாகனங்களில் HSRP எனப்படும் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு பொறுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஹெச்.எஸ்.ஆர்.பி. (HSRP) பிளேட்களை எப்படி பெறுவது என்று தெரிந்துகொள்ளலாம்,
HSRP என்பது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ணக் குறியிடப்பட்ட லேபிள் கொண்ட நம்பர் பிளேட் ஆகும். இந்த பிளேட் இல்லாத வாகனங்களை ஓட்டி பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
undefined
இந்த பிளேட்டைப் பெற எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். 3D ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் முதலிய சிறப்பு அம்சங்கள் இந்த நம்பர் பிளேட்டுகளில் காணப்படும்.
சொளையா ரூ.10,000 தள்ளுபடி! தாராளமான ஆஃபரில் கிடைக்கும் ஐவூமி ஈ-ஸ்கூட்டர்கள்!
2022 ஜூலை அல்லது அதற்குப் பிறகு இப்போது விற்கப்படும் வாகனங்கள் அனைத்தும் HSRP நம்பர் பிளேட்டுகளுடன் தான் வருகின்றன. பல மாநிலங்கள் பழைய நம்பர் பிளேட்களுக்குப் பதிலாக HSRP நம்பர் பிளேட்களை மாற்றுவதைக் கட்டாயம் ஆக்கியுள்ளன.
இந்த பிளேட் இல்லாத வண்டிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
20 x 20 மிமீ அளவில் அலுமினியத்தாலான இந்தப் பிளேட் எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு வண்டியுடன் இணைக்கப்படும். நீல நிற ஹாலோகிராமில் குரோமியத்தாலான அசோகச் சக்கரச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். HSRP பிளேட்டின் 10 இலக்க பின் (PIN) நம்பர் லேசர் மூலம் பொறிக்கப்பட்டிருக்கும்.
எச்.எஸ்.ஆர்.பி. பிளேட் பெற ttps://bookmyhsrp.com என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். என்ஜின் எண், சேஸ் எண், பதிவு எண், வாகனப் பதிவு நிலை ஆகிய விவரங்களை பயன்படுத்தி, அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்து, கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை சம்ர்ப்பித்தது கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளவும். அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றும் ஹெச்.எஸ்.ஆர்.பி. (HSRP) பிளேட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
5 நிமிடத்துக்கு ஒரு கார் விற்பனை! தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா சேல்ஸ் புதிய சாதனை!