வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட் வாங்குவது எப்படி? முழு விவரம் இதோ...

By SG Balan  |  First Published Sep 3, 2024, 10:04 AM IST

ஃபேன்ஸி நம்பர் பிளேட் 9999, 0001, 4444, 1111 போன்ற எண்களாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள வாகன ஓட்டிகள் ஆர்டிஓவில் கூடுதல் கட்டணம் செலுத்தி தங்கள் கார் அல்லது பைக்கிற்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட்டைப் பெறலாம்.


விஐபி நம்பர் பிளேட் என்றும் அழைக்கப்படும் ஃபேன்ஸி நம்பர் பிளேட் கார்கள் மற்றும் பைக்குகள் இரண்டிற்கும் வழங்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குவதற்காக இந்த தனித்துவமான நம்பர் பிளேட்டுகளை வாங்குகிறார்கள். இதற்காக லட்சக்கணக்கில் கூட செலவு செய்கிறார்கள்.

ஃபேன்ஸி நம்பர் பிளேட் 9999, 0001, 4444, 1111 போன்ற எண்களாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள வாகன ஓட்டிகள் ஆர்டிஓவில் கூடுதல் கட்டணம் செலுத்தி தங்கள் கார் அல்லது பைக்கிற்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட்டைப் பெறலாம்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழ்நாட்டில் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டைப் பெறுவது எப்படி?

ஃபேன்ஸி நம்பர் பிளேட் டிஜிட்டல் ஏலத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. எனவே, இந்த நம்பர் பிளேட்களை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். தமிழ்நாட்டில் ஃபேன்சி நம்பர் பெற செய்ய வேண்டிய என்ன என்று பார்க்கலாம்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு பொதுப் பயனர் கணக்குத் தொடங்க வேண்டும்.

பதிவுசெய்து உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு, ஃபேன்சி எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம். பதிவு செய்வதற்கு தேவையான கட்டணத்தை செலுத்தி விருப்பமான எண்ணை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

விஐபி கார் எண்ணை தேர்வு செய்ய ஏலம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ஏலத்தில் விலை முடிவு செய்யப்பட்டதும் மீதித் தொகையைச் செலுத்தி ஃபேன்சி நம்பரைப் பெற்றுகொள்ளலாம். தேவைப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறவும் செய்யலாம்.

ஃபேன்சி நம்பரை ஏலத்தில் வாங்கிவிட்டால், அந்த நம்பர் உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை பிரிண்ட் எடுத்து பத்திரமாக சேமித்துகொள்ளவும். பிற்காலத்தில் தேவையான சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் மாடல்கள் அறிமுகம்! ரூ.10 லட்சத்தில் புதிய பேமிலி கார்!!

ஃபேன்ஸி நம்பர் பிளேட்: நினைவில் கொள்ளவேண்டியவை

தமிழ்நாட்டில் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிக்கும் போது சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

பரிவஹன் இணையதளத்தில் உங்களுக்கு விருப்பமான விஐபி அல்லது ஃபேன்சி எண்களின் பட்டியலைப் பார்க்கலாம். அல்லது அருகில் உள்ள ஆர்டிஓவைப் பார்க்கலாம்.

ஃபேன்சி நம்பர் ஏலத்தில் வென்ற பிறகும் தேர்ந்தெடுத்த நம்பர் பிளேட்டைப் பெறவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம். ஆனால், விரும்பிய நம்பர் பிளேட்டை வாங்குவதாக இருந்தால் உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும்

அனைத்து வகையான வாகனங்களுக்கும் எச்எஸ்ஆர்பி (HSRP) பிளேட் கட்டாயம். அது ஃபேன்ஸி நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வாகனத்தில் ஃபேன்ஸி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தாலும், 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் கடைப்பிடிப்பது முக்கியம்.

15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் உலகின் முதல் எலெக்ட்ரிக் பஸ்! மிரட்டும் வீர மஹாசாம்ராட்!!

click me!