டாடா கர்வ் பெட்ரோல், டீசல் மாடல்கள் அறிமுகம்! ரூ.10 லட்சத்தில் புதிய பேமிலி கார்!!

By SG Balan  |  First Published Sep 3, 2024, 9:05 AM IST

டாடா கர்வ் ICE எஸ்யூவிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. செப்டம்பர் 12 முதல் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பமாகிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா கர்வ் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அகாம்ப்ளிஷ்ட் ஆகிய நான்கு மாடல்களில் எட்டு விதமான டிரிம்களுடன் கிடைக்கும். இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ.17.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

இருப்பினும், டாடா மோட்டார்ஸ் இன்னும் முழுமையான விலை விவரங்களை வெளியிடவில்லை. சில DCT வேரியண்ட்களின் விலைகளை வெளியிடப்படவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

டாடா கர்வ் ICE கோல்டு எசென்ஸ், பிரிஸ்டைன் ஒயிட், டேடோனா கிரே, ஃபிளேம் ரெட், ப்யூர் கிரே மற்றும் ஓபரா ப்ளூ ஆகிய ஆறு வண்ணங்களில் மாடல் கிடைக்கும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. செப்டம்பர் 12 முதல் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 நிமிடத்தில் முழு சார்ஜ் ஆகும் உலகின் முதல் எலெக்ட்ரிக் பஸ்! மிரட்டும் வீர மஹாசாம்ராட்!!

TATA Curvv ICE சிறப்பு அம்சங்கள்:

Curvv ICE அதன் எலெக்ட்ரிக் மாடலைப் போலவே நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷனுடன் இரு முனைகளிலும் LED DRL உள்ளது. ஹெட்லேம்ப்கள், ஹாரியர் ஸ்டைலில் அமைக்கப்பட்ட கிரில் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், டூயல்-டோன் 18-இன்ச் அலாய் வீல், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் நேர்த்தியான ஸ்பாய்லர் ஆகியவை இதன் வெளிப்புறத்தில் உள்ள சிறப்பம்சங்கள்.

இந்தக் எஸ்யூவி 4,308 மிமீ நீளம், 1,810 மிமீ அகலம் மற்றும் 1,630 மிமீ உயரம், 208 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. 500 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கைகளை மடிப்பதன் மூலம் இதை 973 லிட்டர் அளவுக்கு விரிவாக்க முடியும்.

12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் உள்ளதைப் போன்ற ஸ்டீயரிங். டாஷ்போர்டிற்கான வடிவமைப்பும் Nexon EV போலவே இருக்கிறது.

பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், ஏசியை இயக்க டச் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், பின்புற ஏசி வென்ட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆறு வழி பவர்-அட்ஜஸ்டபிள் ஓட்டுனர் இருக்கை ஆகியவை உள்ளே இருக்கும் சிறப்பம்சங்கள்.

உள்புற வடிவமைப்பு டூயல்-டோன் பர்கண்டி மற்றும் கருப்பு தீம்களில் கிடைக்கிறது. இது டிரிம் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆறு ஏர்பேக்குகள், ப்ளைண்ட் வியூ கண்காணிப்பு, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்ட், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS போன்ற அம்சங்களும் உள்ளன.

Curvv ICE மூன்று எஞ்சின் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் 120 ஹெச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை உருவாக்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 118 ஹெச்பி வரை கொடுக்கும். 125 ஹெச்பி மற்றும் 225 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் புதிய 1.2 லிட்டர் டிஜிடிஐ ‘ஹைபரியன்’ (TGDI ‘Hyperion’) பெட்ரோல் மோட்டாரும் உள்ளது. மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் கொண்டவை.

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் கார்களின் விலை விவரம்:

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதைத் தடுக்க என்ன செய்யணும்? இதை மட்டும் மறந்துறாதீங்க!

 

click me!