ஹைபிரிட் அவதாரம் எடுத்த எம்.ஜி. ஆஸ்டர் கார்! இந்தியாவில் ரிலீஸ் எப்போது?

By SG Balan  |  First Published Aug 29, 2024, 11:49 PM IST

பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான மோரிஸ் கேரேஜஸ் புதுப்பிக்கப்பட்ட ZS காரை வியாழக்கிழமை உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஆஸ்டர் என்று அழைக்கப்படும் இந்தக் கார் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் பல புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.


பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான மோரிஸ் கேரேஜஸ் புதுப்பிக்கப்பட்ட ZS காரை உலகளாவிய சந்தைகளில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆஸ்டர் என்று அழைக்கப்படும் இந்தக் கார், ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் புதிய தோற்றத்துடன் அறிமுகமாகியுள்ளது.

எம்.ஜி. ஆஸ்டர் காரின் இந்த புதிய எடிஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 102 PS ஆற்றலையும் 128 Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. 136 PS மற்றும் 250 Nm திறன் கொண்ட மின்சார மோட்டாரும் உள்ளது. இந்த ஹைப்ரிட் செட்-அப்பின் ஒருங்கிணைந்த வெளியீடு 195 PS மற்றும் 465 Nm ஆகும்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 167 கிமீ. 0-100 கிமீ வேகத்தை வெறும் 8.7 வினாடிகளில் எட்டிவிடலாம். மூன்று டிரைவ் முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது காருக்கு முன்பைவிட ஸ்போர்ட்டி லுக்கைக் கொடுக்கிறது. புதிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள், பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள் புதுமையாக உள்ளன.

வெறும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் இத்தனை நன்மையா! தினமும் ஒரு ரெய்டு போகலாமே!

MG ZS ஹைப்ரிட் ஆறு வண்ணங்களில் கிடைக்கின்றன. வெள்ளை, கருப்பு, சில்வர், சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வாங்கலாம். ZS ஹைப்ரிட்+ 17 மற்றும் 18 இன்ச் வீல் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

MG ZS ஹைப்ரிட்+ SE மற்றும் Trophy என இரண்டு டிரிம்களில் கிடைக்கும். லெவல்-2 ADAS சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள அவசரகால பிரேக்கிங், டிபார்ச்சர் வார்னிங் அம்சத்துடன் லேன் கீப் அசிஸ்ட், ஆடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரியர் கிராசிங் டிராஃபிக் அலர்ட் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் பல உள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை இது ஆறு ஏர்பேக்குகளுடன் வருகிறது. டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி. ஆஸ்டரின் இந்தப் புதிய மாடல் இந்தியாவுக்கு வர 2025ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.  அப்போது இது மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்றவற்றுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். MG ஆஸ்டர் ஹைப்ரிட் கார் இந்தியாவில் சுமார் ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படலாம்.

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் முறையைக் கொண்டுவரும் மத்திய அரசு!

click me!