மின்சார வாகனங்களுக்கான மானியம் 11,500 கோடியாக உயர்வு! ரூ.1,500 கோடி கூடுதல் மானியம் அறிவிப்பு!

Published : Feb 12, 2024, 03:38 PM ISTUpdated : Feb 12, 2024, 03:41 PM IST
மின்சார வாகனங்களுக்கான மானியம் 11,500 கோடியாக உயர்வு! ரூ.1,500 கோடி கூடுதல் மானியம் அறிவிப்பு!

சுருக்கம்

திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின்படி, வாகன மானியங்களுக்கு ரூ.7,048 கோடி, மூலதன சொத்து உருவாக்க மானியங்களுக்கு ரூ.4,048 கோடி, மற்ற முயற்சிகளுக்கு ரூ.400 கோடி என பிரித்து வழங்கப்படும்.

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் பசுமை வாகனங்களுக்கு வழங்கப்படும் FAME-II மானியத்தை மத்திய அரசு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.11,500 கோடியாக உயர்த்தியுள்ளது. கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) மூலம் மின்சார வாகனங்களின் உற்பத்திக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.

நாட்டில் தூய்மையான வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு கூடுதல் மானியம் ஒதுக்கியுள்ளது. இந்த மானியம் மார்ச் 31, 2024 வரை விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அல்லது ஒதுக்கப்பட்ட மானியத் தொகை இருப்பு உள்ள வரை, எது முதலில் வருகிறதோ, அதுவரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிதி மற்றும் கால வரையறை அடிப்படையில் செயல்படுகிறது என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த மானியம் கிடைக்கும். அந்த மானியங்கள் டிமாண்ட் இன்சென்டிவ்களுக்கும் பொருந்தும் என்பதை இது குறிக்கிறது.

புதிய டிரையம்ப் டேடோனா 660 விரைவில் ரிலீஸ்! ஸ்போர்ட்ஸ் பைக்கில் யமஹா, கவாஸ்கியை பீட் பண்ணுமா?

திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின்படி, வாகன மானியங்களுக்கு ரூ.7,048 கோடி, மூலதன சொத்து உருவாக்க மானியங்களுக்கு ரூ.4,048 கோடி, மற்ற முயற்சிகளுக்கு ரூ.400 கோடி என பிரித்து வழங்கப்படும்.

முதலில் FAME II திட்டத்தின் கீழ் 2022 வரை 3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டது. மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. 10 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 5 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 55,000 கார்கள் மற்றும் 7,000 மின்சாரப் பேருந்துகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

மின்சார வாகனங்களின் விற்பனை 2022 இல் 1.02 மில்லியனாக இருந்தது. 2023 இல் 1.53 மில்லியனாகக் கூடி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது மின்சார வாகன விற்பனையில் கணிசமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த முன்னேற்றம் நிலையான போக்குவரத்துக்கான வாகனமாக மின்சார வாகனங்களின் தேவை வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் இந்தியாவின் முதல் சி.என்.ஜி. கார் இதுதான்! எப்படி இருக்கு பாருங்க!

PREV
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!