சென்னை மாநகரில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
EV Charging Stations: சுற்றுச்சூழல் மாசு, எரிபொருள் செலவு, தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு நம் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, அபரிமிதமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மின் வாகனங்களில் அதிக அளவு தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன.
ரூ.1 லட்சத்திற்கு 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இப்போ வாங்கலாம் .. தள்ளுபடி கொஞ்ச நாள் தான்
என்னதான் மின்சார வாகனம் என்றாலும், உரிய எண்ணிக்கையில் சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது, பெருங்குறையாக உள்ளது. இதனால் சார்ஜ் தீர்ந்து வழியில் வாகனம் நின்றுவிடுமோ என்று வாகன ஓட்டிகள் கவலையுடன் பயணிக்க வேண்டியுள்ளது.
தற்போது நாடு முழுதும், 25,202 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. அதில் தமிழகம், 1,413 நிலையங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா 5,765 சார்ஜிங் நிலையங்களுடன் முதலிடத்தில் உள்ளது. தடையின்றி எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ.க்கு ஒன்று, மாநகரங்களில் ஒவ்வொரு, 3 கி.மீ.க்கு ஒன்று என்ற வீதத்தில், சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், சென்னையில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்ளை அதிகளவில் அமைக்க, சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம், சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை நிர்வாகம் செய்து வருகிறது. மாநகராட்சியின் 89 பார்க்கிங் இடங்களில் பெரும்பாலானவற்றில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தின் 100 துணை மின் நிலைய வளாகங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hydrogen Truck: ஹைட்ரஜனில் இயங்கும் லாரி! 500 கிமீ நான் ஸ்டாப்! மாஸ் காட்டிய டாடா மோட்டார்ஸ்!