இன்னும் 1 மாசம் தான்! அட்டகாசமான அப்டேட்களுடன் வெளியாகும் கியா கேரன்ஸ் பேஸ்லிப்ட் மாடல்

Published : Mar 12, 2025, 12:12 PM IST
இன்னும் 1 மாசம் தான்! அட்டகாசமான அப்டேட்களுடன் வெளியாகும் கியா கேரன்ஸ் பேஸ்லிப்ட் மாடல்

சுருக்கம்

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது. புதிய எக்ஸ்டீரியர் அப்டேட்ஸ், இன்டீரியரில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 

கியா அடுத்த மாதம் இந்தியாவில் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்டை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதம் எலக்ட்ரிக் வெர்ஷனும் வரும் என சொல்லப்படுகிறது. இந்த காரின் டெஸ்டிங் மாடல் புகைப்படங்களில் வெளியிலும், உட்புறத்திலும் சில முக்கியமான மாற்றங்கள் தெரிகிறது. எலக்ட்ரிக் வெர்ஷன் டிசைன்களில் இதே போன்று இருந்தாலும், சில எலக்ட்ரிக் ஸ்பெஷல் மாற்றங்கள் இருக்கும். இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன புதிய அப்டேட்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

எக்ஸ்டீரியர் அப்டேட்ஸ்
ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கியா இன்னும் வெளியிடவில்லை. ஆனால், ஸ்பை ஷாட்களில் பார்க்கும்பொழுது, பானெட் லைன் சற்று உயரமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இது எஸ்யூவி போன்று இருக்கும். மற்ற டிசைன் விஷயங்களில், சிரோஸ்ல் இருக்கின்ற மாதிரி ஹெட்லைட்டும், டே டைம் ரன்னிங் லைட்டும், எல்இடி லைட் பார் பயன்படுத்தி கனெக்ட் செய்ய வெர்டிகல் டெயில் லைட்கள் இருக்கும். டெஸ்ட் மாடலில் புதிய டிசைன் டூயல்-டோன் அலாய் வீல்கள் இருக்கின்ற மாதிரி தெரிகிறது. ஆனால், அது இப்போது சந்தையில் இருக்கின்ற மாடலில் இருக்கின்ற அதே 16 இன்ச் அளவில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இன்ஜின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்
கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ் கூட 3 இன்ஜின் ஆப்ஷன்ஸ் இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்பொழுது இருக்கின்ற மாடலில் 113 பிஹெச்பி பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல், 158 பிஹெச்பி பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 114 பிஹெச்பி பவர் தரக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. டிரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரையில், 1.5 லிட்டர் பெட்ரோல் வெர்ஷன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வரும். டர்போ பெட்ரோல் வெர்ஷன் 6-ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் கிடைக்கும். டீசலில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக்கில் வாங்கலாம்.

இன்டீரியர் மாற்றங்கள்
ஏடிஏஎஸ் சூட், 360-டிகிரி கேமரா மாதிரி புது ஃபீச்சர்ஸ் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்ல இருக்கும்னு எதிர்பார்க்கலாம். உள்ள இன்டீரியர்ல பெருசா எதுவும் தெரியல. டேஷ்போர்டு, ஸ்விட்ச், பட்டன்ஸ்ல சின்ன சின்ன மாற்றங்கள் இருக்கலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1.65 லட்சம் தள்ளுபடி.. 293 கிமீ ரேஞ்ச் கொண்ட மலிவு விலை டாடா எலக்ட்ரிக் கார்
கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்