ரூ. 34 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Jul 5, 2022, 7:58 AM IST
Highlights

டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 SP மாடலில் மர்கெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட மக்னீசியம் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டுகாட்டி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் V4 SP மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 34 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் V4 SP விலை ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களை விட முறையே ரூ. 14 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சத்து 76 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அதிக விலைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஹை-ஸ்பெக் உபகரணங்கள் மற்றும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டும் எலெக்ட்ரிக் கார்கள் - எந்த மாடல் முதலிடம் தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிளில் “விண்டர் டெஸ்ட்” கொண்டு இருக்கிறது. இது டுகாட்டி நிறுவனத்தின் மோட்டோ ஜிபி மற்றும் WSBK மோட்டார்சைக்கிள்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மேட் பிளாக் நிற பாடி பேனல்கள், விங்ஸ்-இல் மேட் கார்பன் ஃபினிஷ், பியூவல் டேன்க் மீது பிரஷ்டு அலுமினியம் ஷேட் மற்றும் ரெட் நிற ஸ்டிரீக் உள்ளன. 

இதையும் படியுங்கள்: 160 கி.மீ. ரேன்ஜ், மூன்று ரைடிங் மோட்கள்... வேற லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..!

ஹார்டுவேர் அம்சங்களை பொருத்த வரை டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 SP மாடலில் மர்கெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட மக்னீசியம் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இது S வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் ஃபோர்ஜ்டு அலுமினியம் யூனிட்களை விட 0.9 கிலோ எடை குறைவு ஆகும். பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஷெல்ஃப் பிரெம்போ ஸ்டைல்மா ஆர் கேலிப்பர்கள், பின்புறம் ஒலின்ஸ் ஸ்மார்ட் EC 2.0 செட்டப் வழங்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: மீண்டும் விலை உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த டொயோட்டா...!

என்ஜின் விவரங்கள்:

இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய அலுமினியம் மற்றும் CNC மெஷின்டு ஃபூட் பெக்ஸ், கார்பன் முன்புற மட்கார்டு, லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1103சிசி, V4 சிலிண்டர், லிக்விட் கூல்டு டெஸ்மோசெடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 208 ஹெச்.பி. பவர், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

எலெக்டிரானிக் அம்சங்களை பொருத்தவரை டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 SP மாடலில் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லிடு கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

புதிய டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 SP மாடலுக்கான முன்பதிவு, நாடு முழுக்க அதிகாரப்பூர்வ டுகாட்டி விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

click me!