இ-மொபிலிட்டி நிறுவனமான நெக்ஸ்ஜென் எனர்ஜியா குறைந்த விலையில் மின்சார இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
நொய்டாவை தளமாகக் கொண்ட இ-மொபிலிட்டி நிறுவனமான நெக்ஸ்ஜென் எனர்ஜியா மலிவு விலையில் மின்சார இருசக்கர வாகனத்தை ரூ.36,990 முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெக்ஸ்ஜென் எனர்ஜியா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், எலக்ட்ரிக் வாகனங்களை இன்னும் அணுகக்கூடியதாகவும், வரும் தலைமுறைக்கு மலிவு விலையிலும் மாற்றுவதற்கு இந்த மாடல் ஒரு முக்கியமான படியாக இருக்கும்.
நடப்பு நிதியாண்டில் ரூ.500 கோடிக்கும் அதிகமான விற்பனையை எட்டுவதையும், 500க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர் நெட்வொர்க்குகளை நிறுவுவதையும், EV துறையில் சுமார் 50,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குவதையும் நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில், அடுத்த நிதியாண்டில் உலகின் மிக மலிவு விலையில் நான்கு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நெக்ஸ்ஜென் எனர்ஜியா மார்ச் 18, 2024 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் மின்சார வாகனங்களை (EV) தயாரிக்க ஒரு உற்பத்தி அலகு அமைக்க ரூ. 1,000 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்தது. யூனியன் பிரதேச (ஜே & கே) அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கதுவா தொழில்துறை பகுதி அல்லது காஷ்மீர் பள்ளத்தாக்கில் 100 ஏக்கர் நிலத்தை தேடுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. 'மேக் இன் இந்தியா' உடன் இணைந்து, தன்னம்பிக்கை இந்தியா என்ற கனவை நிறைவேற்றும் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்.
ஜம்மு காஷ்மீரில் அரசுடன் இணைந்து மின் வாகன உற்பத்தி ஆலையை நிறுவுவோம், அதில் ரூ.1,000 முதலீடு செய்வோம் என்று அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர். நெக்ஸ்ஜென் எனர்ஜியா நிறுவனம் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டால், அது நிச்சயம் வாகன சந்தையில் குறிப்பாக மின்சார வாகன துறையில் விலை குறைப்பை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..