கலிஃபோர்னியாவில் வாங்கிய டெஸ்லா காருக்கு, கர்நாடக பதிவு எண்ணைப் பெற்ற பெங்களூரு நபர்.. நெகிழ்ச்சி சம்பவம்

By Ramya sFirst Published May 10, 2023, 6:18 PM IST
Highlights

கலிஃபோர்னியாவில் தான் வாங்கிய டெஸ்லா காருக்கு, பெங்களூரு நபர் ஒருவர் கர்நாடக பதிவு எண்ணைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், தான் வாங்கிய டெஸ்லா காரின் பதிவு பலகையில் சிறுவயதில் பயணம் செய்த சிவப்பு நிற BMTC (Bangalore Metropolitan Transport Corporation) பேருந்தின் பதிவு எண்ணை இணைத்து சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளார்.

செங்கப்பா என்ற இளைஞர் 1992 ஆம் ஆண்டு பள்ளிக்குச் செல்வதற்காக வித்யாரண்யபுராவில் இருந்து யஷவந்த்பூருக்கு 401 B - KA 01, F 232 என்ற பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தின் ஓட்டுநர் தனபால் மஞ்சேனஹள்ளி, செங்கப்பாவின் நெருங்கிய நண்பர். இந்த நினைவுக்காக தான் வாங்கிய டெஸ்லா காருக்கு KA 01 F 232 என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : CRPF-ல் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கடைசி தேதி எப்போது? முழு விவரம் உள்ளே

சமூக ஊடகங்களில், தனபால் மஞ்சேனஹள்ளி என்ற இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். - KA 01, F 232 என்ற எண் தகடு கொண்ட பேருந்தின் படங்களையும், அதே எண்ணைக் கொண்ட டெஸ்லா காருக்கு அருகில் செங்கப்பா நிற்கும் வீடியோவையும் வெளியிட்டார், அதே நேரத்தில் அவர் தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

“நான் 1992-ல் பிஎம்டிசி டெப்போ 11ல் டிரைவராகப் பணிபுரிந்தபோது எனது பேருந்து பல பள்ளிக் குழந்தைகளுக்குப் பிடித்தது. அந்தக் குழந்தைகளில் செங்கப்பாவும் ஆதித்யாவும் என் பேருந்தின் என்ஜினில் அமர்ந்து பல வருடங்களாகப் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். ஆதித்யா இப்போது ஜெர்மனியில் இருக்கிறார். செங்கப்பா இன்னும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தனபால் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆதித்யா இப்போது ஜெர்மனியில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், செங்கப்பா அமெரிக்காவில் வசிக்கிறார். செங்கப்பா சமீபத்தில் ஒரு புத்தம் புதிய டெஸ்லா காரை வாங்கினார். அந்த காரின் பதிவு எண் KA01 F232 வழங்கப்பட்டது. சிறுவயதில் தனக்கு பிடித்த பேருந்தில் இந்தப் பதிவு எண் இருந்தது. எனவே அந்த காரின் முன்புறம் நின்று வீடியோ எடுத்து ஓய்வு பெற்ற ஓட்டுநரின் நண்பர் கே.தனபால் என்பவருக்கு அனுப்பினார்.

சிறந்த நினைவுகள் குழந்தை பருவத்திலிருந்தே வருகின்றன. புலம்பெயர்ந்து தற்போது வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு தாய்நாடு குறிப்பாக வலுவான நினைவுகளை கொண்டுள்ளது. அவர்கள் தங்கள் கடந்த காலத்திற்கு அல்லது தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு தொடர்ந்து ஏங்குகிறார்கள். குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு சிறிய நிகழ்வு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நினைவில் இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இதையும் படிங்க : கர்நாடக தேர்தல்.. வாக்குப்பதிவு மையத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்..

click me!