இந்தியாவில் அறிமுகமானது சிட்ரோயன் நிறுவனத்தின் c3 ஏர்கிராஸ் கார்... வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்!!

By Narendran SFirst Published Apr 28, 2023, 6:06 PM IST
Highlights

சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சிட்ரோன் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் காரான சி5 ஏர்கிராஸ் காரை அறிமுகப்படுத்தியது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சி3 ஹேட்ச்பேக் மற்றும் இசி3 என்ற எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி கார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வரிசையில் தற்போது சிட்ரோயன் நிறுவனம் சி3 ஏர்கிராஸ் மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள ec3, c3 ஹேட்ச்பேக் மற்றும் c5 ஏர்கிராஸ் எஸ்யுவி ஆகிய மாடல்களின் வரிசையில், சி3 ஏர்கிராஸ் நான்காவது மாடலாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 2023 ஆம் ஆண்டிம் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: இந்தியாவில் விரைவில் வெளியாகிறது BMW X3 M40i… ஐந்து முக்கிய அம்சங்கள் இதோ!!

காரின் சிறப்பம்சங்கள்:

இதன் தோற்றம் முதல் இன்சின் வரை அனைத்தும் சி3 காரிலிருந்து எடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 110 எச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே இன்ஜின் சி3 ஹேட்ச் பேக் காரிலும் இருக்கிறது. கியர் பாக்ஸை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. 4.2 மீட்டர் நீளமும், 2671 மிமீ வீல்பேஸூம் கொண்ட இந்த காரில் 200 மிமி கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. மேலும் இதில் 17 இன்ச் அலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது X வடிவ டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் பெரிய டெயில்கேட் மற்றும் பம்பர் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tata Altroz CNG இரட்டை சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் முதல் டாடா கார் அறிமுகம்! - முன்பதிவு ஆரம்பம்

இந்த கார் 7 சீட்டர் மற்றும் 5 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளது. 7 சீட்டர் வெர்ஷனில் 3வது வரிசை சீட்டர் வழங்கப்படுகிறது. 5 சீட்டர் ஆப்ஷனில் 444 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. 7 சீட்டரில் 3 வது வரிசை பின்பக்க சீட்டை அகற்றிவிட்டால் 511 லிட்டர் பூஸ் ஸ்பேஸ் கிடைக்கும். இந்த காரில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 2வது மற்றும் 3வது வரிசைக்கான ரூஃப் மவுண்டட் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்டிற்காக 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக டிரைவருக்கு மல்டி கலர் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மல்டிபிள் டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

click me!