பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிஎன்ஜியில் இயங்கும் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இதுவே இந்தியாவில் முதல் சிஎன்ஜி பைக்காக இருக்கும்.
பஜாஜ் ஆட்டோ சிஎன்ஜியில் இயங்கும் கம்யூட்டர் மோட்டார்சைக்கிளை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. இந்த பைக் அடுத்த மாதம் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் முதல் மோட்டார்சைக்கிளாக இருக்கும் எனவும் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக் பஜாஜ் ப்ரூஸர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது 110-125சிசி பிரிவில் பெட்ரோலில் இயங்கும் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். சமீப காலங்களில் கிடைத்த அப்டேட்களின் அடிப்படையில், வடிவம் மற்றும் செயல்பாட்ல் பஜாஜ் புதுமையான வடிவமைப்பை வழங்க முயல்வதாகத் தெரிகிறது.
நீண்ட இருக்கை மற்றும் மெல்லிய சைடு மற்றும் டெய்ல் பேனல்கள் இருப்பது தெளிவாகிவிட்டது. பிரேஸ்டு ஹேண்டில்பார் மற்றும் நக்கிள் கார்டு உள்ளது. இது டயர் 2 நகரங்களில் சந்திக்கக்கூடிய கரடுமுரடான சாலைகளில் சவாலான பயணத்தைச் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி ஓட்டை உடைசல் பேருந்துகளே பார்க்க முடியாது! 7000 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு திட்டம்!
சேஸ் முற்றிலும் புதியதாக இருக்கும். முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. பைக்கில் முன்பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சின் டிஸ்பிளேஸ்மெண்ட், டேங்க் கொள்ளளவு போன்ற பைக்கைப் பற்றிய மற்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் நேரத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.
சிஎன்ஜி பைக் தினசரி நீண்ட தூரத்திற்கு பயணம் செய்பவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பைக்காக இருக்கும். சிஎன்ஜி பைக் பெட்ரோல் பைக்கைவிட மலிவானது என்பதும் கூடுதல் சிறப்பு அம்சம். முதல் முதலில் அறிமுகமாகும் பஜாஜ் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் இருசக்கர வாகனச் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தத் தயாராக உள்ளது.
டெஸ்லாவை காப்பி அடிக்கும் இந்திய நிறுவனம்... நிரந்தரத் தடை கோரி வழக்கு தொடர்ந்து எலான் மஸ்க்!