Pulsar NS160 and NS200 : பிரபல இரு சக்கர வாகன விற்பனையாளராக பஜாஜ் அதன் மேம்படுத்தப்பட்ட பல்சர் NS160 மற்றும் பல்சர் என்எஸ்200 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங் மற்றும் புளூடூத் இணைப்பைக் கொண்டுள்ள இந்த இரு புதிய வண்டிகளிலும், புதிய எல்சிடி டேஷ் வடிவத்தில் முன்புள்ள NS வரிசையில் பல மாற்றங்களை கொண்டுள்ளது. பல்சர் NS160 மற்றும் 200 ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், இது புதிய LED ஹெட்லைட் வடிவில் வருகிறது.
undefined
மேலும் அதைச் சுற்றியுள்ள DRLகள் இப்போது லைட்டிங் போல்ட் வடிவத்தில் உள்ளன. மேலும் NS200 ஆனது சுற்றிலும் எல்இடி அம்சத்தை பெறுகிறது. இண்டிகேட்டர்கள் இப்போது எல்இடி அலகுகள் மற்றும் பல்சர் N250ல் காணப்படும் அதே மாதிரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டேஷ் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பல்சர் N150 மற்றும் N160ல் அறிமுகமானது அனைவரும் அறிந்ததே.
மேலும் இந்த புதிய மடலை பொறுத்தவரை உங்கள் ஸ்மார்ட்போனை, டிஸ்ப்ளேவுடன் இணைக்கலாம். மேலும் NS160 விலையானது 1.46 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது TVS Apache RTR 160 4V (ரூ. 1.24 லட்சம்-1.38 லட்சம்) மற்றும் Hero Xtreme 160R 4V (ரூ. 1.27 லட்சம்-1.37 லட்சம்) ஆகியவற்றை விட அதிகமாக உள்ளது. இதற்கிடையில், 1.55 லட்சத்திற்கு விற்பனையாகும் பல்சர் NS200க்கு போட்டியாக TVS Apache RTR 200 4V (ரூ. 1.47 லட்சம்) மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 (ரூ. 1.39 லட்சம்) ஆகியவை விற்பனையில் உள்ளது.