இந்தியாவில் டாமினர் சீரிஸ் விலை உயர்வு - ஷாக் கொடுத்த பஜாஜ் ஆட்டோ..!

By Kevin KaarkiFirst Published Jul 11, 2022, 9:48 AM IST
Highlights

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் டாமினர் 400 மற்றும் டாமினர் 250 மோட்டார்சைக்கிள்களை ஃபிளாக்‌ஷிப் மாடல்களாக விற்பனை செய்து வருகிறது. 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாமினர் 400 மற்றும் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடல்களான டாமினர் சீரிஸ் விலை முறையே ரூ. 6 ஆயிரத்து 400 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 152 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: புதுசா எஸ்.யு.வி. வாங்க போறீங்களா? இந்தியாவின் டாப் 5 மாடல்கள் எவை தெரியுமா?

புதிய விலை விவரம்:

பஜாஜ் டாமினர் 400 ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 538
பஜாஜ் டாமினர் 250 ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 002 
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்திக்காக முதலீடு.... மஹிந்திரா போடும் சூப்பர் ஸ்கெட்ச்...!

பஜாஜ் நிறுவனம் தனது டாமினர் 250 மாடலை கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அப்டேட் செய்தது. அப்போதும், இந்த மாடல் மூன்று டூயல் டோன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் அம்சங்களில் எந்த விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இதையும் படியுங்கள்: இனி used cars-யும் விற்பனை செய்வோம்... இந்திய விற்பனையில் டொயோட்டா எடுத்த திடீர் முடிவு...!

டாமினர் 250 மாடலில் 248.77சிசி சிங்கில் சிலிண்டர், லிக்டிவ் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 ஹெச்.பி. பவரை 8 ஆயிரத்து 500 ஆர்.பி.எம்.-லும் 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரத்து 500 ஆர்.பி.எம்.-லும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச், ஃபுல் எல்.இ.டி. லைட்டிங் சிஸ்டம், டிஜிட்டல் கன்சோல் மற்றும் 13 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது.

இதே அம்சங்கள் அப்படியே டாமினர் 400 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், டாமினர் 400 மாடலில் 373.3சிசி, சிங்கில் சிலண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்  39.42 ஹெச்.பி. பவர் மற்றும் 355 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. டாமினர் 400 மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டது. 

இந்த மாடலில் புதிதாக ஃபேக்டரிஃபிட் செய்யப்பட்ட டூரிங் அக்சஸரிக்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் டாமினர் 400 மாடலில் தற்போது நக்கிள் கார்டுகள், உயரமான விண்ட் ஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட், லக்கேஜ் கேரியர் மற்றும் சாடில் ஸ்டே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

click me!