இனி used cars-யும் விற்பனை செய்வோம்... இந்திய விற்பனையில் டொயோட்டா எடுத்த திடீர் முடிவு...!

By Kevin KaarkiFirst Published Jul 10, 2022, 2:41 PM IST
Highlights

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்களை மறு விற்பனை செய்யும் வியாபாரத்தை துவங்கி இருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தை கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. பல்வேறு வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திய கார் விற்பனையில் இருந்து லாபம் ஈட்ட துவங்கி உள்ளன. இந்த வரிசையில், புதிதாக இணைந்து இருக்கும் நிறுவனமாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் கிர்லோஸ்கர் குழுமம் - டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கூட்டணி அமைந்து உள்ளது. 

இதையும் படியுங்கள்: மீண்டும் விலை உயர்வு... டாடா மோட்டார்ஸ் அறிவிப்பால் ஷாக் ஆன வாடிக்கையாளர்கள்...!

சமீபத்தில் பயன்படுத்திய கார் விற்பனை பிரிவில் களமிறங்க இருப்பதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்ததை அடுத்து பெங்களூரு நகரில் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட் (TUCO)- துவங்கி உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் டொயோட்டா நிறுவனம் நாடு முழுக்க டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான மற்றும் நம்பத்தகுந்த பயன்படுத்திய கார் சந்தையை உருவாக்குவதாக தெரிவித்து உள்ளது.

இதையும் படியுங்கள்: ரூ. 1925 கோடி முதலீட்டில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் நிறுவனம்.. மஹிந்திராவின் வேற லெவல் திட்டம்..!

இந்த நிறுவனத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா வாகனங்களை வாங்கி அவற்றை விற்பனை செய்ய இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த நிறுவனத்தின் பணிகள் பெங்களூரு நகரில் துவங்கி உள்ளது. எதிர்காலத்தில் நாடு முழுக்க இந்த நிறுவன வியாபாரத்தை விரிவுப் படுத்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் முடிவு செய்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்: என்னது இத்தனையா? ஒரே சமயத்தில் அதிக கார்களை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

“இந்திய பயன்படுத்திய கார் சந்தை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. TUCO மூலம் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நம்பத்தகுந்த, நேர்மையான மற்றும் வெளிப்படையான பயன்படுத்திய கார் சந்தையை உருவாக்க நினைக்கும் எங்கள் குறிக்கோளின் நீட்சி ஆகும்.” 

“வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த, நம்பத்தகுந்த மற்றும் வெளிப்படையான, கொடுக்கும் காசுக்கு ஏற்ற பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வதே எங்களின் நோக்கம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் கார்களை வழங்கும் போது, விற்பனை சீராக இருக்கும்” என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தெரிவித்து இருக்கிறார். 

டொயோட்டா நிறுவனம் புதிய TUCO பயன்படுத்திய கார்களை விற்பனை செய்வதோடு மட்டும் இன்றி, அவற்றுக்கான ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் மற்றும் அக்சஸரீக்களை வாங்க ஒற்றை தளமாக  இருக்கும் என தெரிவித்து இருக்கிறது. இந்த தளம் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை அதிக நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படையாக விற்பனை செய்ய முடியும்.  

கார் வாங்குவோர் உயர் ரக டொயோட்டா வாகனங்களை சிறப்பான விலையில், வெளிப்படையாக வாங்க TUCO சிறந்த தளமாக இருக்கும் என்றும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. கார் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்த பின், TUCO சார்பில் கார்களில் 203-பாயிண்ட் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கார்கள் அனைத்தும் டொயோட்டா தரத்துக்கு இணையாக இருக்கும்.

click me!