ரூ. 1925 கோடி முதலீட்டில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் நிறுவனம்.. மஹிந்திராவின் வேற லெவல் திட்டம்..!

By Kevin KaarkiFirst Published Jul 8, 2022, 10:45 AM IST
Highlights

மஹிந்திரா துவங்க இருக்கும் புதிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் மதிப்பு ரூ. 70 ஆயிரத்து 70 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. புது பிரிவினை உருவாக்குவதற்காக மஹிந்திரா நிறுவனம் ப்ரிட்டனை சேர்ந்த ப்ரிடிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் (BII) உடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தின் படி ரூ. 1,925 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. முதலீடு இரண்டு கட்டணங்களாக டைபெற இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: என்னது இத்தனையா? ஒரே சமயத்தில் அதிக கார்களை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த நபர்..!

ஒப்பந்தத்தின் படி புதிய நிறுவனத்தில் BII நிறுவனத்திற்கு 2.75 முதல் 4.76 சதவீத பங்குகள் கிடைக்கும். மஹிந்திரா நிறுவனம் மட்டும் புதிய நிறுவனத்தில் ரூ. 1,925 கோடிகளை முதலீடு செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் மதிப்பு ரூ. 70 ஆயிரத்து 70 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

இதையும் படியுங்கள்: கிராஷ் டெஸ்டில் இத்தனை புள்ளிகள் தானா? பயனர்களுக்கு ஷாக் கொடுத்த் பிஎம்டபிள்யூ i4..!

ரூ. 8 ஆயிரம் கோடி முதலீடு:

இதில் மஹிந்திரா நிறுவனம் உலகத் தரம் மிக்க எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்திற்கு 2027 நிதியாண்டு வாக்கில் ரூ. 8 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிறுவனம் மட்டும் இன்றி மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புது XUV400 ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் XUV300 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது என்றும் இந்த மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்து உள்ளது.

இதையும் படியுங்கள்: மாருதியின் முதல் Mid-Size எஸ்.யு.வி. - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

சுற்றுச்சூழல் பாதிப்பு:

“மஹிந்திரா குழுமத்தின் புது நிறுவனத்தில் BII முதற்கட்ட முதலீடு மூலம் பல்வேறு தனியார் நிறுவன முதலீடுகள் கிடைக்கும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன வளர்ச்சி, நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காற்றின் தரம் சார்ந்த இலக்குகளை அடைய மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்தியா மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆட்டோமோடிவ் துறையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதில் மஹிந்திரா மிக முக்கிய பங்கு வகிக்கும்,” என BII நிறுவன தலைமை செயல் அதிகாரி நிக் டோன்ஹோ தெரிவித்து இருக்கிறார். 

மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்களுக்கான டீசரை முன்னதாக வெளியிட்டு இருந்தது. இத்துடன் புது எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்கள் பற்றிய விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

எலெக்ட்ரிக் எஸ்யுவி சந்தை:

மேலும் தற்போதைய நான்கு சக்கர பயணிகள் எலெக்ட்ரிக் வாகன வியாபார சொத்துக்கள் அனைத்தையும் புது நிறுவனத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய நிறுவனம் அதன் தாய் நிறுவனத்தின் உற்பத்தி திறன், டிசைன் மற்றும் டீலர் என பல்வேறு பிரிவுகளின் பலன்களை பெறும் என எதிர்பார்க்கலாம்.

“எங்களின் எலெக்ட்ரிக் எஸ்யுவி பயணத்தில் BII நிறுவனத்தை எங்களின் கூட்டாளியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். பருவநிலை அவசர நிலையை எதிர்த்து போரிடும் குறிக்கோள் கொண்ட நீண்ட கால கூட்டணி கிடைத்து விட்டது. 2040 ஆண்டு வாக்கில் மஹிந்திரா குழுமம் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா நிறுவனமாக விளங்க இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் மஹிந்திரா முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. மேலும் எதிர்கால எலெக்ட்ரிக் எஸ்யுவி சந்தையில் நாங்கள் முன்னணி நிறுவனமாக இருப்போம் என நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்,” என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனிஷ் ஷா தெரிவித்தார்.

click me!