எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 800 சதவீத வளர்ச்சி... மாஸ் காட்டிய இந்திய நிறுவனம்..!

By Kevin Kaarki  |  First Published Jul 11, 2022, 11:26 AM IST

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஜூன் 2022 மாதத்தில் 800 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 3 ஆயிரத்து 200 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

இதையும் படியுங்கள்: இந்தியாவில் டாமினர் சீரிஸ் விலை உயர்வு - ஷாக் கொடுத்த பஜாஜ் ஆட்டோ..!

Latest Videos

undefined

கடந்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்களில் பெரும் அளவிலான வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மாடல்கள் நிரந்தர இடம் பிடிக்க துவங்கி இருக்கின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்: புதுசா எஸ்.யு.வி. வாங்க போறீங்களா? இந்தியாவின் டாப் 5 மாடல்கள் எவை தெரியுமா?

மாதாதந்திர விற்பனை:

ஜூன் 2022 மாதத்தில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மொத்தத்தில் 3 ஆயிரத்து 231 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. சந்தை அடிப்படையில் இது சொற்ப எண்ணிக்கையாக தெரிந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 359 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில், கடந்த மாத விற்பனையில் ஏத்தர் நிறுவனம் 800 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்திக்காக முதலீடு.... மஹிந்திரா போடும் சூப்பர் ஸ்கெட்ச்...!

முன்னதாக மே மாத வாக்கில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3 ஆயிரத்து 787 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது 15 சதவீதம் குறைவு ஆகும். இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து எளிய மாத தவணை முறை வசதியை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பலர் எளிதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

புது வேரியண்ட்:

இது தவிர ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்பட்ட புது மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய மாடல் பெரிய பேட்டரி பேக் கொண்ட இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடலில் 3.66 கிவலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய மாசலில் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஏத்தர் ஸ்கூட்டரின் டாப்  வேரியண்ட் அதிக அம்சங்கள் மற்றும் இகோ மோட், ஸ்மார்ட் இகோ மோட், ரைடு மோட், ஸ்போர்ட் மோட் மற்றும் ராப் மோட் என ஐந்து விதமான ரைட் மோட்களை கொண்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 146 கிலோ மீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

click me!