சுப நிகழ்ச்சிகளில் கருப்பு நிற ஆடை அணிவது ஏன் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது? இப்படி ஒரு காரணம் இருக்கா?

By Ramya s  |  First Published Feb 15, 2024, 9:36 AM IST

சுப நிகழ்ச்சிகளில் கருப்பு நிற ஆடை அணிவது ஏன் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


இயற்கை பல வண்ணங்களால் நிறைந்திருப்பதால், நம்மை சுற்றி எப்போதுமே பல்வேறு வண்ணங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் ஒவ்வொரு வண்ணங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. அந்த வகையில் இந்து மதத்தில் கருப்பு நிறத்தின் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்..

கருப்பு என்பது பலரின் விருப்பமான வண்ணமாக இருப்பதால், ஆடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் போன்றவற்றை கருப்பு நிறத்தில் இருப்பதை விரும்புகின்றனர். ஆனால் இந்து மதத்தில் கருப்பு நிறம் மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக, இந்து மதத்தில், திருமணமான உடன் ஒரு வருடத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற ஆடைகள், கருப்பு கலர் கடிகாரத்தை அணிவது கெட்ட சகுனத்தை அழைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு என்ன காரணம்? கருப்பு கலர் கடிகாரம் அணிவதால் கெட்டது நடக்குமா?

Tap to resize

Latest Videos

காகம் தலையில் அமர்வது சுபமா அல்லது அசுபமா..? ஜோதிடம் கூறுவது என்ன..??

கருப்பு நிறம் சனி பகவானுடன்  தொடர்புடையது. பல பிரபல அரசியல்வாதிகள் கருப்பு பட்டையுடன் கூடிய கடிகாரங்களை அணிவதை நம்மில் பலரும் பார்த்திருபோம். சனி ஒருவரின் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால், சில நேரங்களில் ஜோதிடர்கள் கருப்பு நிறத்தை அணிய அறிவுறுத்துகிறார்கள். மேலும்  ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு மரியாதை, பணம் மற்றும் புகழ் கிடைக்கும்.. எனவே, கருப்பு ஸ்ட்ராப் கொண்ட கடிகாரத்தை அணிவது எப்போதும் கெட்ட சகுனமாக கருதப்படுவதில்லை.

கருப்பு நிறமும் இந்து கலாச்சாரமும்

தீபாவளி, பொங்கல், தசரா, ரக்ஷா பந்தன் போன்ற புனிதமான பண்டிகைகளில், மக்கள் பிரகாசமான வண்ண ஆடைகளை  அணிய விரும்புகிறார்கள். மேலும் கருப்பு நிறத்தை அணிவதைத் தவிர்க்கிறார்கள். கோயில்கள் அல்லது சில பெரிய திருவிழாக் கொண்டாட்டங்களுக்குச் செல்லும்போது கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கிறார்கள். கருப்பு நிறம் பொதுவாக துக்கத்துடன் தொடர்புடையது என்பதே இதற்குக் காரணம்.

இந்து மதத்தில் கருப்பு என்பது தீய சக்தியைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது. இது மரணம், இருள் மற்றும் இருளைக் குறிக்கிறது. இருப்பினும், கண் திருஷ்டியை தடுக்க பெரும்பாலும் கருப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் நெற்றியில் கருப்பு மைப்பொட்டு வைக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. மேலும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் கருப்பு உடை அணிவதை பலரும் தவிர்க்கின்றனர்.

கருட புராணத்தின் படி, இந்த 5 தவறுகளை செய்தால் ஆயுள் குறைவது கன்பார்ம்!

திங்கட்கிழமை கருப்பு அணிவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

பொதுவாக திங்கள்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. திங்கள்கிழமைகளில் பக்தர்கள் சிவபெருமானை போற்றி வணங்கி வருகின்றனர்.. இந்து மதத்தில், சிவபெருமான் மிக உயர்ந்த சக்தியை கொண்ட கடவுளாக கருதப்படுகிறது., சிவபெருமானை அழிக்கும் கடவுள் என்று இந்து புராணங்கள் குறிப்பிடுகின்றன. கருப்பு நிறம் இருள், மற்றும் மரணத்துடன் கூட வலுவாக தொடர்புடையது என்பதால், மக்கள் இந்த நிறத்தை அணிவதைத் தவிர்க்க வேண்டும். 

செவ்வாய் கிழமையில் கருப்பு நிற ஆடைகளை ஏன் தவிர்க்க வேண்டும்?

திங்கள் கிழமையை போலவே செவ்வாய் கிழமை கருப்பு நிறத்தை அணிவதையும் தவிர்க்கின்றனர். செவ்வாய் மற்றும் சனி எதிரிகள் என்று நம்பப்படுகிறது, மேலும் கருப்பு என்பது சனியின் நிறம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, செவ்வாய்க் கிழமை கருப்பு அணிவது அசுபமாக கருதப்படுகிறது.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமை அனுமன் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாட்கள். நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அனுமனை வழிபடுவதன் மூலம் வாழ்வின் அனைத்து நோய்களும் குணமாகும். அனுமனுக்கு கருப்பு நிறம் பிடிக்காது என்றும் நம்பப்படுகிறது. அனுமனின் ஆசியை பெற வேண்டுமெனில் கோவிலுக்குச் செல்லும்போது சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது..

click me!