இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் ஜோதிடம் பார்ப்பது என்பது இயல்பாகவே இருக்கும் ஒரு விஷயம் தான். அந்த வகையில் உங்கள் ராசிக்கு ஏற்ற வண்ணத்தில் நீங்கள் வாகனம் வைத்திருந்தால், அது உங்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை தரும் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
அரசியல்வாதிகள் முதல், பல பெரும்புள்ளிகள் வெள்ளை அல்லது குறிப்பிட்ட நிறங்களில் கார்களை வைத்திருப்பதை நாம் கவனித்திருப்போம். அவை அனைத்தும் ராசிகளை கணக்கிட்டு தான் என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள். உங்கள் ராசிக்கு என்று ஒவ்வொரு கிரகநிலைகள் உள்ளது, அதேபோல அந்த கிரகங்களுக்கு என்று சில வண்ணங்கள் உள்ளது. அந்த வண்ணங்களை ஒத்த வாகனங்களை நீங்கள் உங்களுடன் வைத்திருக்கும் பொழுது உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு அவருடைய ராசிக்கான அதிபதி செவ்வாய், ஆகவே சிவப்பு, மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறங்கள் அவர்களுக்கு உரிய நிறங்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு அவருடைய ராசிக்கான அதிபதி வெள்ளி, ஆகவே வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு நிறங்கள் அவர்களுக்கு உரிய நிறங்கள்.
Today Rasi Palan 19th August 2023: யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்..!!
மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய ராசிக்கான அதிபதி புதன் கிரகம், ஆகவே அவர்கள் சிவப்பு, புற்களில் இருக்கும் பச்சை மற்றும் சாம்பல் நிறங்கள் அவர்களுக்கு உரிய நிறங்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய ராசிக்கான அதிபதி வெள்ளி தான், ஆகவே ரிஷப ராசிக்காரர்களை போல இவர்களும் வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு நிறங்களை பயன்படுத்தலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மேஷ ராசிக்காரர்களைப் போல செவ்வாய்தான் அவர்களின் ராசிக்கான அதிபதி ஆகவே அவர்களும் சிகப்பு, மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறங்களை பயன்படுத்தலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு வியாழன் தான் அவர்களுடைய ராசிக்கான அதிபதி ஆகவே அவர்கள் சிகப்பு, மஞ்சள், வெண்கல நிறம் மற்றும் குங்குமப்பூ நிறங்களை பயன்படுத்தலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய ராசிக்கான அதிபதி சனி, ஆகவே நீலம், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை பயன்படுத்தலாம்.
கும்ப ராசி ராசிக்காரர்களுக்கு சனி தான் அதிபதி ஆகவே இவர்களும் நீலம், பச்சை மற்றும் மஞ்சள் ஆகி நிலங்களை பயன்படுத்தலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு தனுசு ராசிக்காரர்களை போல வியாழன் தான் அவர்களுடைய ராசியின் அதிபதி, ஆகவே அவர்களும் சிவப்பு, மஞ்சள் வெண்கல நிறம் மற்றும் குங்குமப்பூ நிறத்தை பயன்படுத்தலாம்.
மேற்குறிய ராசிக்காரர்கள் தங்கள் ராசிக்கு ஒத்த நிறங்களில் வாகனங்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் கூறுகின்றனர் ஜோதிடர்கள்.
இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 19, 2023, சனிக்கிழமை