
Mahashivaratri Viratham 2025 in Tamil : மஹா சிவராத்திரி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை: மஹா சிவராத்திரி இந்து மதத்தின் மிக முக்கியமான மற்றும் புனிதமான பண்டிகை., இது சிவபெருமானை வழிபடுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகை. இந்த நாளில் தான் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் விரதம், பூஜை மற்றும் உபவாசம் இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மஹா சிவராத்திரி விரதத்தின் போது, இந்த விரதம் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டு புண்ணியம் பெற சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இந்த நாளில் நீங்கள் முழுப் பலனையும் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மஹா சிவராத்திரி 2025: மரண பயம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!
மஹா சிவராத்திரி விரதம் தொடங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்
விரதத்திற்கு முன் தயாராக இருக்க வேண்டும். மனதளவில் மற்றும் உடல் ரீதியாகவும் விரதம் இருப்பதற்கு முன் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள் முன்னதாக அதாவது சிவராத்திரிக்கு முந்தைய இரவு, லேசான உணவு சாப்பிட்டு மன அமைதியுடன் இருக்க வேண்டும். நாளை புதன்கிழமை 26ஆம் தேதி மஹாசிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி இன்று முதல் நீங்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இன்று இரவு லேசான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவாக சாப்பிட வேண்டும்.
மஹா சிவராத்திரி அன்று சிவலிங்க வழிபாடு:
இந்த தேதியில் பிறந்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி; நீங்கள் இந்த தேதியில் பிறந்திருக்கிறீர்களா?
மஹாசிவராத்திரி விரதம் இருக்கும்போது என்ன செய்யக்கூடாது