
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரம் இரண்டு வகையான ஆற்றல்களில் அடிப்படையை கொண்டுள்ளதூ. அதாவது நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றல் என்று.
வாஸ்து சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள விதிகளை முறையாக பின்பற்றினால் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. அதே சமயம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை புறக்கணிக்கும் போது சில நேரங்களில் அது வாழ்க்கையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் உங்களது வீட்டில் அல்லது வாழ்க்கையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால் அது வாஸ்து தோஷம் என்று அர்த்தம். எனவே அந்த அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து தோஷம் அறிகுறிகள் :
1. பணம் தொடர்பான பிரச்சனைகள்:
உங்களது வீட்டில் தினமும் பயணம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை வாஸ்து குறைபாடுகளின் அறிகுறியாகும். ஒரு வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் அந்த வீட்டில் வருவானம் குறைவது மட்டுமல்லாமல், தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்த்திரம் சொல்லுகின்றது. இதற்கு முக்கிய காரணம் உங்கள் வீட்டின் தென்மேற்கு திசையில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. வீட்டின் பிரதான கதவு அல்லது ஜன்னலில் திசையை மாற்றுவதன் மூலம் இந்த குறைபாட்டை நீங்கள் சுலபமாக போக்கிவிடலாம்.
2. உடல்நல பிரச்சனைகள்:
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களோ அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் அதை நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். ஏனெனில் இந்த அறிகுறி உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆம், உங்களது வீட்டில் வாஸ்து குறைபாடு காரணமாக தான் இந்த மாதிரியான பிரச்சனைகள் அடிக்கடி உங்களது வீட்டில் நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வீட்டின் தென்கிழக்கு திசையில் ஏதேனும் பொருள் இருந்தால் அதனால் குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வீட்டின் இது திசை எப்போதும் காலியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு இந்த வாஸ்து தோஷமே! உடனே சரி செய்ங்க.!
3. தூக்கமின்மை:
நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள பிற நபர்களோ தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள் என்றால் அது வாஸ்து குறைபாடுகளின் அறிகுறியாகும். எனவே தூங்கும் அறையில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதை உடனே அகற்றிவிடுங்கள்.
4. சண்டை மற்றும் பதற்றம்:
உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது என்றால், அது வாஸ்து வாஸ்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு சண்டைகள் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் நீங்க அதிகமான அழுத்தத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், அதுவும் வாஸ்து தோஷத்தின் அறிகுறிதான்.
இதையும் படிங்க: தண்ணீர் தொடர்பான "இந்த" வாஸ்து குறைபாடுகளை புறக்கணிக்காதீங்க... உங்களை ஏழையாக்கும்!
5. வேலையில் இடையூறுகள்:
உங்களது வேலையில் இடையூறு நீங்கள் அடிக்கடி அனுபவிக்கிறீர்கள் என்றாலோ அல்லது வெற்றி உங்களது கையில் இருந்து நழுவினாலோ அது வாச தோஷத்தின் அறிகுறியாகும். வேலையில் அடிக்கடி இடையூறு முக்கிய காரணம் வீட்டின் மையப் பகுதியில் வாஸ்து குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். வீட்டின் மையப் பகுதி பிரம்ம ஸ்தலம் என்பதால் இந்த இடத்தில் ஏதேனும் கனமான பொருட்களை வைத்திருந்தால் அதை உடனே அங்கிருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக இந்த இடத்தில் கழிப்பறை இருக்கவே கூடாது.
6. விலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது பாதகமான விளைவுகள்:
உங்கள் வீட்டில் விலங்குகள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் எந்தவித காரணமும் இல்லாமல் திடீரென காய்ந்து விட்டாலோ அது வாஸ்து தோஷத்தின் அறிகுறியாகும்.