
வாஸ்து சாஸ்திரத்தில் செடிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு விதமான நன்மைகளை வழங்கும் தன்மை கொண்டவை என்றாலும் எந்த செடியை எந்த திசையில், எந்த இடத்தில் வைக்கிறோம் என்பதை பொருத்து, அவற்றின் பலன்கள் மாறுபடும். பொதுவாகவே வீட்டில் மரங்கள், செடிகள் வளர்த்தால் மகிழ்ச்சி, செல்வ வளம் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற செடிகளை வீட்டில் வைப்பதால் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். இவற்றில் மல்லிகை செடியை எங்கு வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் என தெரிந்து கொள்ளலாம்.
மல்லிகை செடியின் நன்மைகள் :
மல்லிகை, வீட்டை நறுமணமாக வைத்திருக்க மட்டுமல்ல வாஸ்து படி நமக்கு பலவிதமான நன்மைகளை தருவதிலும் முக்கியமானதாகும். மல்லிகை அன்பு, அமைதி, தூய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் கருத்து வேறுபாடுகள், அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் மல்லிகை செடியை நட்டு, வளர்த்தால் அந்த நிலைமை மாறி விடும். அது மட்டுமல்ல நிம்மதியான தூக்கம், மனதில் ஒருமுகத்தன்மை ஆகியவை ஏற்படும். மேலும் மல்லிகை செடி வீட்டில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றமை அதிகரிக்கும். மனஅழுத்தம், கவலைகள் நீங்கும்.
மல்லிகை செடி வைக்க ஏற்ற திசை :
வாஸ்துப்படி மல்லிகை செடியை வீடு அல்லது தோட்டத்தின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது நல்லது. இதனால் பாசிடிவ் அதிர்வலைகள் அதிகரிக்கும். குறிப்பாக கிழக்கு திசை என்பது புதிய உதயத்துடன் தொடர்புடைய திசையாகும். அதனால் கிழக்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் வீட்டின் தென் மேற்கு திசையில் மறந்தும் மல்லிகை செடியை வைத்து விடக் கூடாது. இது செடியின் வளர்ச்சியை மட்டுமின்றி வீட்டின் வளர்ச்சியையும் தடுக்கும்.
வீட்டிற்குள் மல்லிகை செடி வளர்க்க டிப்ஸ் :
ஒருவேளை மல்லிகை செடியை வீட்டிற்குள் வைத்து வளர்க்க போகிறீர்கள் என்றால் கிழக்கு அல்லது வடக்கு மூலைகள் மிகவும் ஏற்றவை. இது அறை அல்லது வீட்டின் சூழ்நிலையை பாதுகாத்து, பாசிடிவ் எனர்ஜியை அதிகப்படுத்தும். மல்லிகை செடியை நன்கு பராமரிப்பதும் வீட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். தினமும் முறையாக தண்ணீர் ஊற்றவது, சூரியஒளி படும் படி வைப்பது, சரியான மண்ணில் விதையிடுவது ஆகியவை செடியின் வளர்ச்சி மற்றும் வீட்டின் ஆற்றல்கள் வளர்ச்சிக்கும் உதவும்.
அதிர்ஷ்டம் பெருக மல்லிகை செடி வைக்க வேண்டிய இடம் :
மல்லிகை செடியை வீட்டின் நிலைவாசலுக்கு அருகில் வைத்து வளர்த்தால் வீட்டை மனமாக வைத்திருப்பதுடன், வீட்டில் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருக செய்து விடும். வாசலுக்க இடது புறமாக மல்லிகை செடியை வைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் பணத்திற்கு குறை என்பதே ஏற்படாது. வலது புறத்தில் மாதுளை போன்ற செடிகளை வைப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும். அதே சமயம் வீட்டிற்கு வெளியே பிரதான நுழைவு வாயில், கேட் ஆகியவற்றிற்கு அருகில் ரோஜா, மல்லிகை, வெற்றிலை ஆகியவற்றை வைப்பது நல்லதல்ல. இதனால் வீட்டில் நோய், துன்பம், குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் பிரிவு ஆகியவை ஏற்பட்டு விடும் என்பது நம்பிக்கை.
குழந்தைகள் படிக்கும் அறையில் மல்லிகை செடியை வைத்தால், குழந்தைகளின் நினைவாற்றல் பெருகும். கல்வியிலும் முன்னேற்றம் ஏற்படும். இத அவர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் ஏற்படாமல் தடுத்து அமைதியை தரும். அமைதியான, நிம்மதியான சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.