உங்கள் கனவில் அடிக்கடி சிவன் வருகிறாரா? அதற்கு இது தான் அர்த்தம்

Published : Feb 17, 2025, 09:07 PM IST
உங்கள் கனவில் அடிக்கடி சிவன் வருகிறாரா? அதற்கு இது தான் அர்த்தம்

சுருக்கம்

கடவுள் உருவங்கள் கனவில் வருவது சாதாரணமானவை கிடையாது. அதிலும் சிவ பெருமான் கனவில் வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. இப்படிப்பட்ட கனவு உங்களுக்கு வருகிறது என்பதால் அதற்கு என்ன அர்த்தம்? சிவ பெருமான் மற்றும் அவருடன் தொடர்புடைய கனவுகள் வந்தால் அவற்றிற்கு என்ன அர்த்தம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

நாம் காணும் கனவுகள் நம்முடைய நிகழ்கால வாழ்க்கை அல்லது எதிர்காலத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. கனவு சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. மற்ற கனவுகளை விட தெய்வங்கள் அல்லது கோவில்கள் தொடர்பான கனவுகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

தெய்வங்கள் கனவில் வருவது மிகவும் புண்ணியமானதாகும். இது அனைவருக்கும் நடந்து விடாது. அப்படி தெய்வம் தொடர்பான கனவு, அதிலும் அடிக்கடி வருகிறது என்றால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். கனவில் தெய்வ தரிசனம் காண்பது, அவரின் அருளும், துணையும் எப்போதும் உங்களுக்கு உள்ளது என்பதையே காட்டுவதாகும். இது போல் சிவ பெருமான் மற்றும் சிவ பெருமானுடன் தொடர்புடைய விஷயங்கள் அடிக்கடி கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிவ பெருமான் கனவில் வந்தால்... 

உங்களின் கனவில் சிவ பெருமான் அல்லது சிவனுடன் தொடர்புடைய பொருட்கள், சிவன் கோவில், சிவ சின்னங்கள் ஆகியவை கனவில் வந்தால் உங்களின் வாழ்க்கையில் சிவ பெருமான் அருளால் மிகப் பெரிய மாற்றம் நடக்க போகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். அதிலும் சிவ பெருமான் தொடர்பான கனவுகள் அடிக்கடி உங்களுக்கு வருகிறது என்றால் சிவ பெருமானின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைத்து, வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல போகிறீர்கள் என்று அர்த்தம்.

சிவன் கோவிலை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையே மாற போகிறது என்று அர்த்தம். சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம். 

சிவலிங்கத்தை கனவில் கண்டால்...

சிவலிங்கத்தை கனவில் காண்பது மிகவும் புண்ணியமாதாகும். பண பற்றாக்குறை, மனக்குறை, உடல் ரீதியான பிரச்சனை என எதில் நீங்கி சிக்கி, மீள முடியாமல் இருந்தாலும் அதிலிருந்து விடுதலை கிடைக்க போகிறது என்று அர்த்தம். தினமும் சிவனை நினைத்து தியானம் செய்து நல்லது. சிவலிங்கத்தை கனவில் காண்பது வெற்றியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. 

சிவனும் பார்வதியும் தம்பதி சமேதராக கனவில் வந்தால் பல புதிய வாய்ப்புக்கள் உங்களை தேடி வரப் போகிறது என்று அர்த்தம். மிக விரைவிலேயே பணம், வசதி, நிறைவான வாழ்க்கை உங்களுக்கு அமைய போவதை இது குறிப்பதாகும். முந்தைய பிறவிகளில் நீங்கள் செய்த சிவ வழிபாடு மற்றும் பக்தியின் தொடர்ச்சியாகவும், சிவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடாகவும் இது போன்ற கனவுகள் ஏற்படலாம்.

சிவ தாண்டவத்தை கனவில் கண்டால்...

சிவன் தாண்டவம் ஆடுவதை போலவோ அல்லது நடராஜரின் வடிவத்தையோ கனவில் கண்டால் நிறைய செல்வம் சேரப் போகிறது என்று அர்த்தம். ஆனால் கடுமையான போராட்டத்திற்கு பிறகே அவை உங்களுக்கு கிடைக்கும் என்று அர்த்தம். சிவ பெருமானின் திரிசூலம் என்பது முக்காலத்தையும் குறிக்கக் கூடியதாகும். அதை கனவில் கண்டால் உங்களின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய பல உண்மைகள் உங்களுக்கு புரிய போகிறது என்று அர்த்தம்.

சிவனின் தலையில் இருக்கும் பிறை நிலவை கனவில் கண்டால் வாழ்வில் முக்கிய முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். சிவனின் தலையில் இருந்து கங்கை நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் உங்களின் ஆத்மா தூய்மை அடைவதாகவும், அறிவு, செல்வம், அன்பு ஆகியவை உங்களுக்கு அளவில்லாத கிடைக்க போவதாக அர்த்தம்.

PREV
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!