
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரையிலான வாரம் சாதகமான பலன்களையும், புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரவுள்ளது. இந்த வாரம் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவால்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும், ஆழ்ந்த ஆராய்ச்சிலையும் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த வாரமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்கள் பெறும். உங்களுடைய தலைமைப பண்புகள் வெளிப்படும். சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்தவும் பதவி உயர்வு பெறவும் சிறந்த நேரமாகும். எதிர்பாராத வகையில் புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரலாம். அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் அங்கீகரிக்கப்படும். நிதி நிலை மேம்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபங்கள் கிடைக்கும். அடைக்க முடியாமல் தவித்து வந்த கடன்கள் அடைக்கப்படும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு, வாகனம் போன்ற சிறந்த முதலீடுகளை செய்ய இது உகந்த நேரம் ஆகும். நிதி மேலாண்மையில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.
குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். சிறு சிறு மனக்கசப்புகள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உறவு வலுப்படும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப விசேஷங்களில் மகிழ்ச்சியுடன் பங்கேற்பீர்கள். காதல் வாழ்க்கையில் ஆழமான பிணைப்பு புரிதல் அதிகரிக்கும். துணையுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் உறவு வலுப்படும். தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய காதல் உறவு மலரும் வாய்ப்புகள் அதிகம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும்.
மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இத்தனை நாட்கள் கடினமாக இருந்தது என்று நினைத்திருந்த பாடங்கள் அனைத்தும் எளிதில் புரியும். கடினமான உழைப்பை வழங்கினால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு கல்விக்கான வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மன இறுக்கங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலர்ஜி, ஒவ்வாமை, மூட்டு வலி போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் எந்தவித பெரிய உடல் நலக் கோளாறுகளும் ஏற்படாது. உங்கள் ஆற்றல் அதிகரித்து அதிக புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது நன்மைகளைத் தரும். அனுமன் மந்திரங்களை பாராயணம் செய்வது தடைகளை நீக்கி வெற்றியைத் தரும். சிவபெருமான் வழிபாடு மன அமைதியையும், அருளையும் பெற்றுத் தரும். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.