Jul 28 - Aug 3 Rasi palan: கடக ராசிக்காரங்களே இந்த வாரம் உஷாரா இருங்க.. அதிர்ஷ்டத்தோடு சேர்ந்து ஆபத்தும் வருது

Published : Jul 28, 2025, 01:39 PM IST
weekly rasi palan Kadagam rasi

சுருக்கம்

ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கடக ராசிக்கான இந்த வார ராசிப் பலன்கள்

கடக ராசியினருக்கு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை சாதகமான பலன்களையும், சில சவால்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். சமூகத்தில் உங்களின் நிலை உயரும். நீண்ட நாட்களாக காத்திருந்த சில காரியங்கள் முடிவடையும். அதே நேரத்தில் சில மன கலக்கங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக உணர்ச்சிவசப்படலாம். எனவே தேவையற்ற கோபம், உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். குடும்பம் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள்

கடக ராசியினருக்கு இந்த வாரம் பணியிடத்தில் முன்னேற்றமான சூழல் நிலவும். புதிய பொறுப்புகள் அல்லது திட்டங்கள் ஒதுக்கப்படலாம். அவற்றை திறம்பட கையாளுவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லுறவு பேண வேண்டியது அவசியம். தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலைமை சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். பெரிய முதலீடுகளை செய்வதற்கு முன்பு நன்கு ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். குடும்பச் செலவுகள் அதிகரிக்க கூடும்.

குடும்பம் மற்றும் உறவுகள்

குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவும். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. அந்த ஆலோசனை உங்களுக்கு பெரிய பலன்களைத் தரலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறு சண்டைகள் ஏற்பட்டாலும் அதைப் பேசி தீர்ப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் பாசமும், புரிதலும் அதிகரிக்கும். துணையுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படும். பிரச்சனைகள் ஏற்பட்டால் மனம் விட்டு பேசி தீர்ப்பது நல்லது. தனிமையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத, நல்ல அறிமுகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும்.

படிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம்

மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரும். படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடினமான பாடங்களில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சிறப்பான முறையில் செயல்படுவார்கள். குழு விவாதங்கள் மற்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறிது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வழக்கமான உடல்நலப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கும். வயிறு கோளாறுகள், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதும், சரியான நேரத்தில் தூங்குவதும் அவசியம். பயணங்களின் போது உணவு மற்றும் தண்ணீரில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

செய்ய வேண்டிய வழிபாடு மற்றும் பரிகாரம்

கடக ராசியினர் திங்கள்கிழமைகளில் சிவபெருமானை வழிபடுவது நன்மை தரும். சிவாலயங்களுக்கு சென்று அங்கு அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யலாம். பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானை வழிபடுவது மன அமைதியும், தெளிவையும் தரும். அன்னதானம் அல்லது ஏழைகளுக்கு உதவி செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். இந்த வாரம் உங்களுக்கு சுப வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!