Viruchiga Rasi Palan Jan 06: விருச்சிக ராசி நேயர்களே, இன்று பல மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.! ரெடியா இருங்க.!

Published : Jan 05, 2026, 05:11 PM IST
Viruchiga Rasi Today Rasi palan

சுருக்கம்

Jan 06 Viruchiga Rasi Palan : ஜனவரி 06, 2026 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

கிரக நிலைகள்:

ராசிநாதன் செவ்வாய் சாதகமான நிலையில் இருக்கிறார். சந்திர பகவான் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே இன்றைய நாள் நிம்மதியாக இருக்கும். ராசிக்கு நான்காம் வீட்டில் சனியும், ஏழாம் இடத்தில் குருவும் அமர்ந்துள்ளனர்.

பொதுவான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் வேகம் எடுக்கும். எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். உங்கள் பேச்சில் தெளிவும், அதிகாரமும் வெளிப்படும். ஆன்மீக ரீதியான அல்லது தொழில் நிமித்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். நிலம் அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்காக உங்களை தேடி வருவார்கள். உடல் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வரக்கூடும் என்பதால் அதிக தண்ணீர் அருந்துவது நல்லது.

பரிகாரங்கள்:

செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. சரவணபவ மந்திரத்தை உச்சரிப்பது மனவலிமையைத் தரும். துவரை தானம் செய்வது நல்லது. அருகில் உள்ள கோவிலில் செவ்வரளி பூ சமர்ப்பித்து நெய் தீபம் ஏற்றுவது தடைகளை நீக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanusu Rasi Palan Jan 06: தனுசு ராசி நேயர்களே, இன்று எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி உங்களுக்குத்தான்.!
Makara Rasi Palan Jan 06: மகர ராசி நேயர்களே, இன்று நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும்.! ரொம்ப கவனமா இருங்க.!